மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 19 செப் 2021

20,000 மையங்களில் இன்று தடுப்பூசி முகாம்!

20,000 மையங்களில் இன்று தடுப்பூசி முகாம்!

தமிழகத்தில் இரண்டாவது முறையாக இன்று (செப்டம்பர் 19) தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

கொரோனா பரவலிலிருந்து மக்களைக் காப்பாற்றத் தமிழக அரசு தடுப்பூசி செலுத்தும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காகக் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் 40,000 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அனைத்து பகுதிகளிலும் மக்கள் ஆர்வமாகச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இதனால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 20 லட்சத்தைக் கடந்து அன்றைய தினம் ஒரே நாளில் 28.91 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டது. மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்த நிலையில் மீண்டும் செப்டம்பர் 17ஆம் தேதி தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், தடுப்பூசி டோஸ் குறைவாக இருப்பதால் 19ஆம் தேதி போடப்படும் என்று தேதி மாற்றி அறிவிக்கப்பட்டது. அதன்படி மாநிலம் முழுவதும் 20,000 மையங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. இதில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே கடந்த முறை போன்று இன்றும் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்ட அளவை தாண்டுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

-பிரியா

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

ஞாயிறு 19 செப் 2021