மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 19 செப் 2021

ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்திருந்த நிலம் மீட்பு!

ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்திருந்த நிலம் மீட்பு!

சென்னையில் தனியார் கல்லூரியால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரூ.2,000 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

சென்னை ராஜீவ் காந்தி சாலையில், சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரி பகுதியில் ஜேப்பியார் கல்வி குழுமம் இயங்கிவருகிறது. இந்தக் குழுமத்தைச் சேர்ந்த ஜெயின்ட் ஜோசப் கல்லூரி நிர்வாகம் 91.4 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகச் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வருவாய்த் துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

20 ஆண்டுகளாக இந்த நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கில் நிலத்தை மீட்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்திருந்த நிலம் நேற்று மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட நிலத்தை வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென் சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ், சென்னை ஆட்சியர் விஜயராணி மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.

நிலம் மீட்கப்பட்டது குறித்து அமைச்சர் ராமச்சந்திரன் கூறுகையில், "இந்த நிலத்தை மீட்கும் விவகாரத்தில் நீண்டநாள் சட்ட போராட்டத்திற்குப் பிறகு அரசுக்குச் சாதகமான தீர்ப்பைச் செங்கல்பட்டு நீதிமன்றம் வழங்கியது. அதன்படி 20 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலம் மீட்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஆக்கிரமிப்பு செய்த நிலங்களைக் கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் வளர்ச்சிப் பணிக்கு நிலங்கள் தேவைப்படுவதால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் நிச்சயம் கையகப்படுத்தப்படும்.

தற்போது மீட்கப்பட்ட இடத்தில் மாணவர்களுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது. எனவே மாணவர்களுக்குப் பாதிப்பு இல்லாமல் அந்த இடம் காலி செய்யப்படும். சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் அதிகமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

-பிரியா

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

ஞாயிறு 19 செப் 2021