மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 18 செப் 2021

பயங்கரவாதத்துக்கு எதிராக போராட வேண்டும்: மோடி

பயங்கரவாதத்துக்கு எதிராக போராட வேண்டும்: மோடி

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் குழுவின் 21ஆவது கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் பொதுவான வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் குழுவின் 21-வது கூட்டம் நேற்று தஜிகிஸ்தானில் உள்ள துஷான்பேவில் நடைபெற்றது. சீனா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் இந்தியாவின் சார்பாக வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் பங்கேற்றார்.

தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மோன் கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.

இந்த கூட்டத்தில் காணொளி காட்சி மூலம் கலந்துகொண்ட பிரதமர் மோடி, “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பிராந்தியத்தில் வளர்ந்து வரும் அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்தால் ஏற்படும் சிக்கல்கள் குறித்துப் பேசினார்.

பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று தெரிவித்த அவர், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பைச் சேர்ந்த பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, நம்பிக்கை பற்றாக்குறை ஆகியவை தொடர்பான பிரச்சினைகள்தான் மிகப்பெரிய சவால்களாக உள்ளது. அதிகரித்து வரும் பயங்கரவாதம் தான் இந்த பிரச்சினைகளுக்குக் காரணம். ஆப்கானிஸ்தானின் சமீபத்திய நிகழ்வுகள் இந்த சவாலை இன்னும் வெளிப்படையாகக் காட்டுகின்றன. பயங்கரவாதம் மற்றும் அதற்கு ஆதரவு அளிப்பவர்களுக்கு எதிராக பொதுவான வழிமுறைகளை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

சனி 18 செப் 2021