மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 18 செப் 2021

அனைத்து தொகுதிகளுக்கும் சமமாக நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு!

அனைத்து தொகுதிகளுக்கும் சமமாக நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு!

அரசின் திட்டங்களைச் செயல்படுத்த அனைத்து தொகுதிகளுக்கும் சமமாக நிதி ஒதுக்குவது உறுதி செய்யப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று (செப்டம்பர் 18) தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், நாமக்கல் மாவட்டம் அனிமூர் பஞ்சாயத்துத் தலைவர் தாமரைச்செல்வன் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார்.

அதில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஊரகப் பகுதிகளுக்கான முன்னுரிமை திட்ட நிதியிலிருந்து, அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த தங்கமணியின் தொகுதியான குமாரபாளையம் தொகுதிக்கு மட்டும், சாலை அமைத்தல் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளுக்காக 20.61 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளுக்கும் சரிசமமாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு இன்று (செப்டம்பர் 18) உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு பிளீடர் முத்துக்குமார், அரசின் திட்டங்களை அமல்படுத்தும் போது அனைத்து தொகுதிகளுக்கும் சமமான நிதிப் பங்கீடு வழங்கப்படுவது உறுதி செய்யப்படும். இதன்மூலம் குறைவான நிதி ஒதுக்கப்பட்டதாக எந்த குறையும் இருக்காது என்று குறிப்பிட்டார்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அனைத்து தொகுதிகளுக்கும் மற்ற திட்டங்களுக்கும் ஒதுக்கப்படும் நிதியில் பாரபட்சம் இருக்கக் கூடாது என்று கூறி வழக்கு விசாரணையை 2022 பிப்ரவரி 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

-பிரியா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

சனி 18 செப் 2021