மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 18 செப் 2021

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

எனது பிறந்தநாளில் 2.51 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தியதால் ஒரு அரசியல் கட்சிக்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக மோடி விமர்சித்துள்ளார்.

பிரதமரின் பிறந்தநாளான நேற்று நாடு முழுவதும் 2.51 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் , “ ஒரே நாளில் 2.5 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது மகிழ்ச்சியான செய்திதான். அதற்காக ஏன் பிரதமர் பிறந்தநாள் வரை காத்திருக்க வேண்டும். இவ்வாறு போடுவதென்றால் ஒவ்வொரு நாளும் பிரதமரின் பிறந்த நாளை கொண்டாடுங்கள்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் பிரதமர் இன்று (செப்டம்பர் 18) கோவா கோவிட் தடுப்பூசி பயனாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுடன் பிரதமர் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

அவர், பேசுகையில், “நேற்று 2.5 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டது என்னை உணர்ச்சிவசப்பட வைத்தது. நேற்று ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 15 லட்சம் டோஸ்களுக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, ஒரு நிமிடத்துக்கு 26 ஆயிரத்துக்கும் அதிகமான டோஸ்கள், ஒரு வினாடிக்கு 425-க்கு மேல் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், “ஒரே நாளில் இவ்வளவு தடுப்பூசி செலுத்தப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொண்டால் காய்ச்சல் ஏற்படும் என மக்கள் கூறுவார்கள். ஆனால் எனது பிறந்தநாளில் இரண்டரை கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது ஒரு அரசியல் கட்சிக்கு காய்ச்சலை ஏற்படுத்தியுள்ளது” என்று காங்கிரஸை மறைமுகமாக சாடினார்.

-பிரியா

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

சனி 18 செப் 2021