மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 18 செப் 2021

ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை: புலம்பும் முன் களப்பணியாளர்கள்!

ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை: புலம்பும் முன் களப்பணியாளர்கள்!

கொரோனா வைரஸ் கடந்த ஒன்றரை ஆண்டுக் காலமாக மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்த வைரஸ் பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்றி வரும் முன் களப்பணியாளர்களுக்கு ஒரு மாதம் ஊதியம் சிறப்பு ஊதியமாக வழங்கப்படும் என்று கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. திமுகவும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது.

ஆனால் கடந்த ஆட்சியிலும் ஊக்கத் தொகை வழங்கவில்லை. தற்போது திமுகவும் வழங்கவில்லை என்று புலம்புகிறார்கள் முன் களப்பணியாளர்களான மருத்துவர்கள்.

கொரோனா பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்க மருத்துவர்கள் இரவு பகலாகப் பணி செய்து வருகிறார்கள். கொரோனா நோயாளிக்குச் சிகிச்சை அளிப்பதால் குடும்பத்திலிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு பணி செய்கின்றனர். இதனால் பல இடங்களில் கணவன் மனைவிக்கு இடையே பிரிவும் ஏற்பட்டது.

அதேபோல் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணிபுரிபவர்கள், காவல் துறையினர், நகராட்சி மற்றும் உள்ளாட்சி ஊழியர்கள் என பலர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

செவிலியர்கள், செவிலியர் உதவியாளர்கள், லேப் டெக்னிஷன்கள் என அனைவரும் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்து வருகின்றனர்.

எனவே, மருத்துவத் துறையினர் சோர்ந்து போகாமல் இருக்க முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா வார்டு மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் பணி செய்பவர்களுக்கு ஒரு மாதம் ஊதியத்தைச் சிறப்பு ஊதியமாக வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் வழங்கப்படவில்லை.

அதுபோன்று, திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் முன் களப்பணியாளர்களான டாக்டர்களுக்கு 30 ஆயிரம், செவிலியர்களுக்கு 20 ஆயிரம், செவிலியர் உதவியாளர் மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு 15 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்தார். தற்போது அவரது அறிவிப்பும் வெற்று அறிவிப்பாகிவிட்டது என்கிறார்கள் முன் களப்பணியாளர்கள்.

இந்நிலையில், பொதுச் சுகாதாரத் துறை மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் செல்வ வினாயகம், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் வேளாண்மைத் துறை ஆணையருக்கு ஊக்கத்தொகை கேட்டு கடிதம் எழுதினார். அதில், பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, ஏப்ரல், மே. ஜூன் 2021 ஆகிய மூன்று மாதங்களில் தொடர்ந்து நேரடியாக தொற்றாளர்களுடன் பணிபுரிந்த பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க மொத்த செலவினத் தொகையாக 399.66 கோடி தேவைப்படுகிறது

ஊக்கத்தொகை வழங்க ஒரு குழு அமைத்து, அக்குழுவால் துறை தலைவர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களை ஆய்வுசெய்து பத்து துறைகளுக்கான ஊக்கத்தொகை வழங்க 399 கோடி 65 லட்சத்து 962 ரூபாய் செலவாகும். இந்நிலையில் 160 கோடி நிதி ஒதுக்கியிருப்பது, பத்து பெரிய துறைகளைச் சார்ந்த தகுதியுடைய பணியாளர்களுக்கு நிதி தொகுப்பாகப் பகிர்ந்து வழங்கிடச் சாத்தியமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

வருவாய்த் துறையும் நிதித் துறையும் 160 கோடிக்கு மேல் கொடுக்க முன் வராததால், முன்களப் பணியாளர்களுக்கு முதல்வர் அறிவித்த ஊக்கத் தொகையை வழங்க இயலாது என்று கைவிடப்பட்டுள்ளதாக மருத்துவத் துறையினர் கூறுகிறார்கள்.

அதிமுக ஆட்சி சிறப்பு ஊதியம் கொடுக்காமல் ஏமாற்றியது, திமுக ஆட்சி ஊக்கத்தொகையை வழங்காமல் ஏமாற்றிவிட்டது என்கிறார் செவிலியர் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர்.

-வணங்காமுடி

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

சனி 18 செப் 2021