மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 18 செப் 2021

தமிழக மக்களுக்காக சேவையாற்றுவேன்...: புதிய ஆளுநர்!

தமிழக மக்களுக்காக சேவையாற்றுவேன்...: புதிய ஆளுநர்!

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். எனவே கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி தமிழகத்திலிருந்து விடைபெற்றார் பன்வாரிலால் புரோகித்.

புதிய ஆளுநராக, நாகாலாந்து மாநில ஆளுநராக இருந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ரவீந்திர நாராயண ரவியை குடியரசு தலைவர் நியமித்தார்.

இதைத் தொடர்ந்து புதிய ஆளுநரான ஆர்.என்.ரவி, நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை முதல்வர், மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் வரவேற்றனர்.

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 18) காலை 10.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

இதில் முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், வைகோ, ஜி கே வாசன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். எடப்பாடி பழனிசாமிக்கு எட்டாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

விழா தொடங்கியதும் முதல்வர் ஸ்டாலினும் தலைமை நீதிபதியும் புதிய ஆளுநரை மேடைக்கு அழைத்து வந்தனர். பின்னர் தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. தொடர்ந்து தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, ஆளுநராக ஆர்.என்.ரவிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்றதும் முதல்வர் ஸ்டாலின் புதிய ஆளுநர் மற்றும் அவரது மனைவிக்கு புத்தகங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து தலைமை நீதிபதி பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து தேசிய கீதத்துடன் விழா நிறைவுபெற்றது.

இதன்பின், சபாநாயகர் மற்றும் அமைச்சர்களை ஆளுநருக்கு அறிமுகம் செய்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின். அமைச்சர்கள் ஆளுநருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பதவி ஏற்பு நிகழ்ச்சியை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி செய்தியாளர்களைச் சந்தித்தார். வணக்கம் என தமிழில் கூறி தனது பேச்சை தொடங்கிய அவர், “பழமையான பாரம்பரியம் கொண்ட தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு தமிழக மக்களின் முன்னேற்றத்துக்கு உழைப்பேன். ஆளுநர் பதவி என்பது விதிகளுக்கு உட்பட்டது. அதற்கேற்பச் செயல்படுவேன்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தமிழகத்தில் உள்ளது. என்னால் முயன்ற அளவுக்கு தமிழக மக்களுக்கு சேவை ஆற்றுவேன். தமிழ் மொழியை கற்றுக்கொள்ள முயற்சி மேற்கொள்ள இருக்கிறேன்.

கொரோனாவை கட்டுப்படுத்த இணைந்து பணியாற்றுவது அவசியம். தமிழக அரசு கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்டு கட்டுப்படுத்தியுள்ளது. அரசின் செயல்பாடுகள் குறித்து கூறுவதற்கு கால அவகாசம் தேவை” என்றார்.

-பிரியா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

சனி 18 செப் 2021