மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 18 செப் 2021

உள்ளாட்சித் தேர்தலை எதிர்த்து அதிமுக வழக்கு!

உள்ளாட்சித் தேர்தலை எதிர்த்து அதிமுக வழக்கு!

ஊரக உள்ளாட்சி தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்த கூடாது என்று அதிமுக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , கள்ளக்குறிச்சி , விழுப்புரம், வேலூர் , ராணிப்பேட்டை , திருப்பத்தூர், தென்காசி , திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று செப்டம்பர் 13-ஆம் தேதி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவித்தார்.

மிகச்சிறிய அளவிலான இந்த தேர்தலை இரு கட்டங்களாக நடத்துவது பற்றி திமுகவுக்கு உள்ளேயே சலசலப்புகள் எழுந்தன. இந்த நிலையில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்துவது என்பது கள்ள ஓட்டு போட வழி வகுக்கும் என்றும் திமுகவுக்கு சாதகமான முறைகேடுகளை அரங்கேற்றுதற்காகவே இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் கூட இந்த விவகாரம் பற்றி பேசப்படவில்லை. அப்படியெனில் இதை ஹிடன் அஜெண்டாவாக வைத்திருந்தார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது" என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும் பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் ஜி.கே. மணியும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

இந்த பின்னணியில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதை எதிர்த்து அதிமுக சார்பில் அக்கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று (செப்டம்பர் 17) வழக்கு தொடுத்துள்ளார்

"மொத்தமே 14,000 வாக்குச்சாவடிகள் மட்டுமே இருக்கும் நிலையில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்துவது என்பது முறைகேடுகளுக்கு வழி வகுக்கும். வன்முறைக்கு வழி வகுக்கும். எனவே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ள புகாரில் குறிப்பிட்டுள்ளபடி மத்திய அரசின் பார்வையாளர்களையும் இந்த தேர்தலிலே நியமிக்க வேண்டும்"" என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என்று தெரிகிறது.

வேந்தன்

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

சனி 18 செப் 2021