மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 17 செப் 2021

மோடி பிறந்த நாளை கொண்டாடிய காங்கிரஸ்

மோடி பிறந்த நாளை கொண்டாடிய காங்கிரஸ்

பிரதமர் நரேந்திர மோடியின் எழுபத்தி ஓராவது பிறந்தநாள் விழா இன்று (செப்டம்பர் 17) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதைஒட்டி, .தமிழக பாஜக சார்பில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கொடியேற்றி இனிப்புகள வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள்.

தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று மோடிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மோடிஜி என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் பிறந்த நாளை அவரது கட்சியினர் கொண்டாட பிற அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில்... தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மோடியின் பிறந்த நாளை சத்தியமூர்த்தி பவனில் விமரிசையாகக் கொண்டாடி உள்ளனர்.

மோடியின் பிறந்த நாளை காங்கிரஸ் கொண்டாடியிருக்கிறதா என்ற ஆச்சரியத்துக்கு தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் மவுலானா சுவாரசியமாக பதிலளித்திருக்கிறார்.

இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இந்திய பிரதமர் மோடியின் பிறந்த நாளை தேசிய வேலை வாய்ப்பற்றோர் தினமாக கொண்டாடுகிறோம் என்று கூறி... பிரம்மாண்டமான ஒரு பதாகையை இளைஞர் காங்கிரசார் அனைவரும் சுற்றி நின்று தூக்கிப் பிடித்தனர். அப்போது அவர்கள், "பிரதமர் மோடியின் ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருமளவு அதிகரித்துள்ளது. பக்கோடா விற்கும் வேலை கூட தற்போது அரிதாகி வருகிறது. எனவே மோடியின் பிறந்த நாளை தேசிய வேலைவாய்ப்பு அற்றோர் தினமாக நாங்கள் கொண்டாடுகிறோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்தான் இந்தியாவின் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு வரும்” என்று இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

.வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வெள்ளி 17 செப் 2021