மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 17 செப் 2021

உள்ளாட்சித் தேர்தல்: அமமுக நிலை என்ன?

உள்ளாட்சித் தேர்தல்: அமமுக நிலை என்ன?

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு... வேட்பு மனு தாக்கல் உள்ளிட்ட தேர்தல் நடவடிக்கைகளும் தொடங்கிவிட்டன.

திமுக, அதிமுக போன்ற கட்சிகள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பாளர்களை நியமித்து விட்டன. காங்கிரஸ் கட்சியும் 9 மாவட்டங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து தேர்தல் பணிகளை முடுக்கி விட்டிருக்கிறது. அதிமுக கூட்டணியில் இருந்த பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. அதேபோல கடந்த சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் இருந்த தேமுதிகவும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

ஆனால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடமிருந்து இதுவரை உள்ளாட்சித் தேர்தல் பற்றிய எந்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடப்படாததால் அமமுக கட்சியினர் இடையே தேர்தலில் போட்டியிடுகிறோமா இல்லையா என்ற குழப்பம் நிலவி வருகிறது.

இது தொடர்பாக தேர்தலை சந்திக்கும் பகுதிகளைச் சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் சிலரிடம் பேசினோம்.

" டிடிவி தினகரன் தனது இல்லத் திருமணத்தில் கடந்த சில வாரங்களாகவே பிசியாகிவிட்டார். அதேநேரம் 9 மாவட்ட அமமுக மாவட்டச் செயலாளர்களிடம் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது பற்றி ஆய்வு செய்து தகுந்த வேட்பாளர்கள் பட்டியலைத் தயாரிக்குமாறு தலைமை கழக நிர்வாகிகள் மூலம் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதன்படியே வேட்பாளர்கள் பட்டியலும் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் உள்ளாட்சித் தேர்தலில் அமமுக போட்டியிடுவது குறித்து சசிகலா வேறுபட்ட கருத்து கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.

ஆனால் திருமணம் முடிந்த கையோடு சசிகலாவிடம் இது தொடர்பாக ஆலோசித்து விட்டு விரைவில் டிடிவி தினகரன் அறிவிப்பார்” என்கிறார்கள்

-வேந்தன்

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

4 நிமிட வாசிப்பு

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

வெள்ளி 17 செப் 2021