மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 16 செப் 2021

கே.சி.வீரமணி: ரெய்டுக்கு முன்பே கணக்கெடுத்த விஜிலன்ஸ் அதிகாரிகள்!

கே.சி.வீரமணி: ரெய்டுக்கு முன்பே கணக்கெடுத்த விஜிலன்ஸ் அதிகாரிகள்!

கடந்த அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணிக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகள், அலுவலகங்களில் சோதனை செய்த விஜிலன்ஸ் போலீஸார் முதலில் தங்களை சுய பரிசோதனை செய்துகொண்டனர்.

01-4-2016 முதல் 31-3-2021 வரையில் கே.சி.வீரமணி அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருப்பதற்கான ஆதாரங்களைச் சேகரித்துக்கொண்ட விஜிலன்ஸ் போலீஸார், அவருக்கு எதிராக, நேற்று (செப்டம்பர் 15) மாலை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.

அதைத்தொடர்ந்து இன்று 28 இடங்களில் ரெய்டு நடத்தினர். ஒவ்வொரு இடத்திற்கும் டிஎஸ்பி தலைமையில் அபிஷியல் விட்னஸ் 2 பேர், கூட்டுறவு வங்கிகளின் நகை மதிப்பீட்டாளர் ஒருவர், இரண்டு இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸார்கள் என பத்து பேருக்கும் குறையாமல் சென்றனர்.

காலையிலேயே ஜோலார்பேட்டையில் உள்ள முன்னாள் அமைச்சர் வீரமணி வீட்டுக்குச் சென்றனர். அங்கு வீரமணி மற்றும் அவரது குடும்பத்தினர் இருந்தனர். அப்போது, வீரமணியிடம் தங்களை அறிமுகம் செய்துகொண்டு, வந்தவர்கள் அனைவரும் சுய பரிசோதனை செய்துகொண்டனர். ஏனென்றால், ‘விஜிலன்ஸ் போலீஸார் வெளியிலிருந்து எடுத்துவந்து கணக்கு காட்டிவிட்டார்கள்’ என்று தவறாகச் சொல்லக்கூடாது என்பதற்காக.

வந்தவர்களிடம் எஃப்.ஐ.ஆர் இருக்கிறதா என்று கேட்டார் வீரமணி, உடனே அவரிடம் எஃப்.ஐ.ஆர் நகலை அதிகாரிகள் கொடுத்தனர். அதை வாங்கி படித்துப் பார்த்துவிட்டு, ‘ஒகே பாருங்கள்’ என்று ஒத்துழைத்தார் கே.சி.வீரமணி

முதலில் வீட்டு வாசல், கதவு தோட்டத்து கதவுகளை அடைத்தனர். அடுத்து, வீரமணி உட்பட அவரது குடும்பத்தினர் வைத்திருந்த அனைத்து செல்போன்களையும் வாங்கி சுவிட்ச் ஆப் செய்தனர். காரணம் விஜிலன்ஸ் ரெய்டின் போது இன்கம்மிங் கால் அவுட்கோயிங் கால் இருக்கக்கூடாது என்பதால். பின்னர் அனைத்து அறைகளையும் சோதனை செய்தனர்.

வீட்டை முழுக்க அலசிய அதிகாரிகள், அட்டாச் பாத் ரூம் உள்ள அறைகள், தனி அறைகள், ஹால், மாடி, சுற்றுமதில், கிச்சன் என அத்தனையையும் மதிப்பீடு செய்தனர். அதுபோன்று வீரமணி குடும்பத்தார் அணிந்திருந்த நகைகளையும் வாங்கி மதிப்பீடு செய்தனர்.

இந்த சோதனை குறித்து சென்னை விஜிலன்ஸ் அதிகாரிகளிடம் நாம் கேட்டோம்...

இவ்வளவு நாட்கள் பிறகு வந்து ரெய்டு செய்தால் என்ன வைத்திருப்பார்கள், அனைத்தையும் வெளியில் பத்திரப்படுத்தியிருக்க மாட்டார்களா என்று கேள்வி எழுப்பினோம்.

இதற்கு அவர்கள் கூறுகையில், “ பொதுமக்களும், பத்திரிகையாளர்களும் அப்படிதான் தவறாகக் கருதுகிறார்கள். ரெய்டில் ஒன்றும் சிக்கவில்லை என்றும், வெறும் குண்டூசிதான் கிடைத்தது என்றும் எழுதுகிறார்கள். விஜிலன்ஸ் போலீஸ் அப்படி என்ன ஒன்றும் தெரியாதவர்களா?

ஆட்சி மாறியதும் அந்தந்த மாவட்டம் தாலுக்காவில் உள்ள சார் பத்திரப் பதிவு அலுவலகங்களில் பவர், ரிஜிஸ்ட்டர் ஆனது, தானம் செட்டில்மெண்ட் பதிவானது அனைத்தையும் எடுத்து விடுவார்கள். சொத்து விற்பனை செய்தவர் வாங்கியவர்களின் குடும்ப பின்னணியும் அவர்களின் தொடர்புகள் பற்றியும், குறிப்பு எடுத்துக்கொள்வார்கள். அடுத்ததாக சம்பந்தப்பட்ட உறவினர்கள் ஆதரவாளர்கள் போன்றவர்களின் வங்கி கணக்குகளையும் எடுத்துவிடுவார்கள். அவர்களின் பினாமிகள், நிறுவனங்கள், அனைத்தையும் எடுத்து தயாராக வைத்திருப்பார்கள் அந்தந்த மாவட்ட விஜிலன்ஸ் டிஎஸ்பிகள்.

அதை வைத்துக்கொண்டு சம்பிரதாயத்துக்கு வீடுகளிலும் அலுவலகங்களிலும் ரெய்டு செய்வோம். முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி கடந்த ஐந்து ஆண்டுகளில் சம்பாதித்த சொத்துகள், பினாமிகள் பெயரில் இருப்பது, முதலீடு செய்திருப்பது அனைத்தும் சேர்த்தால் கெய்டு லைன் வேல்யூ (வழிகாட்டி மதிப்பு ) சுமார் நூறு கோடி இருக்கும். மார்கெட் வேல்யூ ஐந்நூறு கோடிக்கும் மேலே இருக்கும் என்பது எங்கள் மதிப்பு. இன்னும் ஆராய்ந்து பார்த்தால் இது அதிகமாகலாம் என்று தெரிவித்தனர்.

மேலும், “அனைத்து மாஜி அமைச்சர்களுடைய சொத்துகளின் விபரங்கள், பினாமிகள், தொழில், வெளிநாட்டில் முதலீடு செய்திருப்பது அனைத்து ஆதாரங்களும் விஜிலன்ஸ் டைரக்டர் கந்தசாமி மேஜை மீது உள்ளதால், யாரும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது” என்கிறார் மூத்த விஜிலன்ஸ் அதிகாரி ஒருவர்.

-வணங்காமுடி

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வியாழன் 16 செப் 2021