மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 16 செப் 2021

இரக்கமில்லாத ஒன்றிய அரசு: துரைமுருகன்

இரக்கமில்லாத ஒன்றிய அரசு: துரைமுருகன்

நீட் தேர்வு காரணமாக இத்தனை பேர் உயிரிழந்ததற்குப் பின்னும் ஒன்றிய அரசு இரக்கம் காட்டும் என்பது சந்தேகம்தான் என நீர்வளத் துறை அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு மீதான அச்சத்தின் காரணமாக வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சௌந்தர்யா என்ற 17 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆண்டில் மட்டும் மூன்று பேர் என இதுவரை 15 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று மாணவி சௌந்தர்யாவின் இல்லத்திற்குத் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மக்களவை உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், டிஎம் கதிர்ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர் நந்தகுமார் ஆகியோர் நேரில் சென்று மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

கதறி அழுத சௌந்தர்யாவின் தாயிடம், “அழாதீர்கள்... உடம்பு வீணாகிடும்” என ஆறுதல் கூறினார் அமைச்சர் துரைமுருகன்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், "மாணவர்கள் பயத்தாலோ அல்லது தேர்வு முடிவு வெளி வந்த பிறகு தோல்வியாலோ மனம் உடைந்து விடக்கூடாது. எவ்வளவு கஷ்டப்பட்டுப் பெற்றோர்கள் படிக்க வைக்கிறார்கள்.

நீட் தேர்வால் இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகும் ஒன்றிய அரசு இரக்கம் காட்டுமா என தெரியவில்லை. விவசாயிகள் போராட்டத்தில் 100 பேர் உயிரிழந்தனர். அதையெல்லாம் பொருட்படுத்தாத ஒன்றிய அரசு இதற்கு இரக்கம் காட்டும் என்பது சந்தேகம்தான்.

100 நாள் வேலைக்குச் சென்று, பத்து பாத்திரம் தேய்த்துப் படிக்க வைத்த அந்த தாயின் குமுறல் எப்படிப்பட்ட இதயத்தையும் நொறுங்க வைத்துவிடும்.

மாணவர்கள் வீரமாக நில்லுங்கள். இதை எதிர்த்து நிற்போம். நிச்சயமாக நீட் என்ற அரக்கனை அழித்து இந்த அரசு முற்றுப்புள்ளி வைக்கும்” என்று தெரிவித்தார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வியாழன் 16 செப் 2021