மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 16 செப் 2021

அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை: அமைச்சர் உறுதி!

அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை: அமைச்சர் உறுதி!

ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி உறுதியளித்தார்.

கோவை மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் மாவட்டம் முழுவதும் கர்ப்பிணி பெண்களுக்கான வளைகாப்பு விழா இன்று(செப்டம்பர் 16) நடைபெற்றது. இதன்படி, கோவை மாவட்டம் முழுவதும் 48 இடங்களில் மையத்திற்கு 50 பேர் வீதம் 2,400 பேர் கலந்துகொள்ளும் விதமாக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை பீளமேடு பகுதியில் நடைபெற்ற விழாவில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு, கர்ப்பிணி பெண்களுக்கு சீர் பொருட்களை வழங்கி வளைகாப்பை நடத்தி வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, “முதல்வரின் அறிவுறுத்தலின்படி இன்று சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்வர் பெண்களுக்கென முத்தான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அப்போது, கொரோனா தொற்று அதிகமாக இருந்த மாவட்டமான கோவையில், தற்போது தினசரி பாதிப்பை 200 ஆக குறைத்து வருகிறோம். வருங்காலத்தில் மூன்றாவது அலை வந்தாலும் அதை எதிர்கொள்ள இந்த அரசு தயாராக உள்ளது. கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் முழு தளர்வுகள் அளிக்கப்படும். அதுவரை மக்கள் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்.

மெகா தடுப்பூசி முகாம் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை 1,485 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும். கோவையில் முதல் தவணை தடுப்பூசி 23 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கும், 2 தவணை தடுப்பூசி 6 லட்சம் பேருக்கும் மேல் போடப்பட்டுள்ளது. நோயை கட்டுப்படுத்த மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

அரிசி கடத்தலை தடுப்பதற்கென கோவை மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் பதவி நியமிக்கப்பட உள்ளது. அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

மாஜி அமைச்சர் வீட்டில் ரெய்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது வந்திருக்கும் புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி தேர்தலுக்காக இது நடைபெற வில்லை. அரசியல் நோக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்படவில்லை” என்று கூறினார்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வியாழன் 16 செப் 2021