மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 16 செப் 2021

விஜிலன்ஸுக்கு துப்புக் கொடுத்த மாஜி அமைச்சர்!

விஜிலன்ஸுக்கு துப்புக் கொடுத்த மாஜி அமைச்சர்!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்கள் உட்பட 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.

திமுக தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று, ‘அதிமுக மாஜி அமைச்சர்கள் மீது விஜிலன்ஸ் ரெய்டு செய்து சிறைக்கு அனுப்பப்படுவார்கள்’ என்பதுதான்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர்களைக் குறிவைத்து விஜிலன்ஸ் ரெய்டு நடந்து வருகிறது.

இன்று (செப்டம்பர் 16) காலை, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்குத் தொடர்புடைய 28 இடங்களில் 28 யூனிட்கள் இறக்கிவிடப்பட்டு ரெய்டு நடத்தி வருகின்றனர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார்.

இந்த ரெய்டுக்கு அதிமுகவிலிருந்த மாஜி அமைச்சரான நிலோபர் கபிலும் முக்கிய காரணம் என்ற தகவலும் கசிந்துள்ளது.

மாஜி அமைச்சர் கே.சி.வீரமணியின் பினாமிகள் யார்? யார்?... எங்கெங்கு சொத்துக்கள் உள்ளது என்ற விபரங்களை தனக்கு நம்பிக்கையானவர் மூலமாக முக்கியமான அதிகாரியிடம் கொடுத்தார் முன்னாள் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபில் என்கிறார்கள் விஜிலன்ஸ் வட்டாரத்தில்.

நிலோபர் கபிலுக்கும் கே.சி.வீரமணிக்கும் அப்படி என்ன விரோதம் என்று விசாரித்தோம்...

“நிலோபர் கபில் அமைச்சராக இருந்தபோது, அவரை அடிமைக்குச் சமமாக வைத்திருந்தார் மாஜி அமைச்சர் வீரமணி. எந்த விஷயமாக இருந்தாலும் வீரமணியைக் கேட்காமல் செய்யக்கூடாது... இன்னும் சொல்லப்போனால் நிலோபர் கபிலின் அமைச்சர் பதவி பறிபோனதற்குக் காரணம் வீரமணிதான் என்ற கோபத்தில் உள்ளனர் அவரது குடும்பத்தினர்.

இதையறிந்த காவல்துறை அதிகாரி ஒருவர் குடும்பத்தினரிடம் விசாரித்த சமயத்தில், வீரமணி சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் அள்ளிக் கொடுத்துவிட்டார் நிலோபர் கபில் என்கிறார்கள்” அதிமுக வட்டாரத்தில்.

வணங்காமுடி

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வியாழன் 16 செப் 2021