மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 16 செப் 2021

முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி வீட்டில் ரெய்டு!

முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி வீட்டில் ரெய்டு!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடந்து வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில், முக்கிய இலாகாவான பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சராக இருந்தவர் கே.சி.வீரமணி. அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக கே.சி.வீரமணி மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சருக்குத் தொடர்புடைய இடங்களில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, வேலூர், ஏலகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட கே.சி.வீரமணிக்குச் சொந்தமான மற்றும் அவருக்குத் தொடர்புடைய 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

இடையம்பட்டியில் உள்ள கே.சி.வீரமணிக்குச் சொந்தமான திருமண மண்டபம் அவரது வீடு ஆகியவற்றிலும், திருப்பத்தூரில் உள்ள அவருக்குச் சொந்தமான நட்சத்திர ஹோட்டலிலும் தீவிர சோதனை நடந்து வருவதாக லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

8 அதிகாரிகள் தலைமையில் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காகத் தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி, ஆட்சிக்கு வந்த பிறகு முதலாவதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த ஜூலை 22ஆம் தேதி சோதனை நடைபெற்றது. அவரை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, வீடுகளில் சோதனை நடைபெற்றது. இந்நிலையில் இன்று கே.சி.வீரமணிக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

முன்னதாக, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். அதிமுகவினர் மீது போடப்படும் வழக்குகளை எதிர்கொள்ள, முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், என்.தளவாய் சுந்தரம், சி.வி, சண்முகம், அதிமுக அமைப்புச் செயலாளர் பி.எஸ் மனோஜ் பாண்டியன், அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் ஐ.எஸ். இன்பதுரை, அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர், ஆர்.எம். பாபு முருகவேல் ஆகியோர் கொண்ட குழுவை அதிமுக அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வியாழன் 16 செப் 2021