மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 16 செப் 2021

‘ஒரே கட்டமாக தேர்தல்’: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

‘ஒரே கட்டமாக தேர்தல்’: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

உள்ளாட்சித் தேர்தலின்போது தமிழகக் காவல் துறைக்கு பதில் மத்திய போலீஸ் படையினரை அதிகளவில் நியமிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

வரும் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், அதை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தில், “234 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்திய நிலையில் ஒன்பது மாவட்டங்களுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடத்துவது தேவையற்றது.

இரண்டு கட்டமாக தேர்தலை நடத்துவதன் மூலம் ஆளுங்கட்சியினர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட சாத்தியக்கூறு உள்ளது. இந்தத் தேர்தலை நியாயமாக நடத்த ஒன்றிய அரசு அதிகாரிகள் அல்லது வேறு மாநில அதிகாரிகளைப் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும்.

வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். வாக்குப்பெட்டிகள் 24 மணி நேர கண்காணிப்புடன் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட வேண்டும்.

மத்திய ரிசர்வ் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் மூலம் வாக்குப்பெட்டிகள் கண்காணிக்கப்பட வேண்டும். 2016ஆம் ஆண்டு நடந்த வன்முறை சம்பவங்கள் போன்ற இந்த உள்ளாட்சித் தேர்தலில் நடைபெறாமல் இருக்க முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வதைத் தடுக்கும் வகையில் பறக்கும் படைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். கொரோனா காலத்தைக் கருத்தில்கொண்டு நட்சத்திர பேச்சாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். இணையதளம் வாயிலாகப் பிரச்சாரம் மேற்கொள்வதை ஊக்கப்படுத்த வேண்டும்.

தமிழகக் காவல் துறை, அரசு அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள் என்பதால் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை அதிகளவில் தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வியாழன் 16 செப் 2021