மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 16 செப் 2021

46 மாணவர்களுக்கு கொரோனா: கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள்!

46 மாணவர்களுக்கு கொரோனா: கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள்!

கோவையில் தனியார் கல்லூரி மாணவர்கள் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பயின்று வந்த கேரள மாணவர்கள் நான்கு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மற்ற மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 46 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் கல்லூரி நிர்வாகத்திற்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் நேற்று (செப்டம்பர் 15) வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா நோய் தொற்றினைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது தமிழ்நாடு அரசால் ஊரடங்கு அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசால் ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் கோவை மாவட்டத்துக்குக் கூடுதலாக கட்டுப்பாடுகள் கடந்த 1ஆம் தேதி முதல் விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வரும் 17ஆம் தேதி முதல் கீழ்கண்ட தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

உணவகங்கள், பேக்கரி கடைகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை பார்சலுக்கு மட்டுமே அனுமதி. மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி, மளிகைக் கடைகள் தவிர மற்ற கடைகள், சந்தைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்படுகிறது. மால்கள், திரையங்குகள், பூங்காக்கள் உள்ளிட்டவை ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்குவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

உழவர் சந்தைகள் சுழற்சி முறையில் 50 சதவிகிதக் கடைகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்ளூர் வாடிக்கையாளர்களைக் கொண்டு இயங்க அனுமதிக்கப்படும். சந்தைகளில் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநில வியாபாரிகள் கலந்து கொள்ளாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்கள் 50 சதவிகிதக் கடைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து வாரச் சந்தைகளுக்கும் தடை தொடரும்.

கோவை மாவட்டத்தில் 82 சதவிகிதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. செப்டம்பர் 20ஆம் தேதி முதல் அனைத்து மால்கள், நகைகடைகள், துணிகடைகள் உள்ளிட்ட இதர கடை ஊழியர்கள் தடுப்பூசியின் இரண்டு தவணையும் செலுத்தி இருக்க வேண்டும்.

வாடிக்கையாளர்கள் கொரோனா தடுப்பூசி முதல் தவணையாவது செலுத்தி இருப்பதை கண்காணிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கடை உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டியது அனைத்து பொதுமக்களின் கடமையாகும். இக்கட்டுப்பாடுகளுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினசரி பாதிப்பில் முதலிடத்தில் இருந்த கோவை மாவட்டம், தற்போது சென்னைக்கு அடுத்த இடத்தில் உள்ளது. கூடுதல் கட்டுப்பாடுகள் காரணமாக மாவட்டத்தில் கொரோனா பரவல் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இந்த நிலையில், மேலும் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

-வினிதா

சசிகலா விவகாரம்: பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை! ...

7 நிமிட வாசிப்பு

சசிகலா விவகாரம்:   பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

4 நிமிட வாசிப்பு

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

7 நிமிட வாசிப்பு

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

வியாழன் 16 செப் 2021