மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 செப் 2021

1-8 பள்ளிகள் திறப்பு குறித்து 30ஆம் தேதி முடிவு: அமைச்சர் பேட்டி!

1-8 பள்ளிகள் திறப்பு குறித்து 30ஆம் தேதி முடிவு: அமைச்சர் பேட்டி!

தமிழ்நாட்டில் ஒன்றாம் முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து செப்டம்பர் 30ஆம் தேதி முதல்வர் முடிவு செய்வார் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 9 முதல் 12 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகளை திறப்பது குறித்து கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இதையடுத்து நேற்று(செப்டம்பர் 14) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இன்று(செப்டம்பர் 15) திருச்சி மாவட்டம் திருவெறும்பூர், கணேசா ரவுண்டானா அருகில் உள்ள பெல் சமுதாயக் கூடத்தில், பயனாளிகள் 88 பேருக்கு ரூ.35.31 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “1-8 மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல விதமாக கருத்துக்கள் பெறப்பட்டன. ஒருசிலர் தொடக்கப்பள்ளிகளை திறக்க வேண்டாம் என்றும், சிலர் நடுநிலைப் பள்ளிகளை மட்டும் திறக்கலாம் என்றும் கூறுகின்றனர். அனைத்து கருத்துக்களும் அடங்கிய அறிக்கையை முதல்வரிடம் அளித்துள்ளோம்.

வருகிற 30ஆம் தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனை நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கை ஆய்வு செய்யப்படும். அதன்படி, மருத்துவ வல்லுநர்கள் மற்றும் பொது சுகாதாரத் துறையினர் வழங்கும் ஆலோசனையின்படி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து முதல்வர் முடிவு செய்து அறிவிப்பு வெளியிடுவார்” என்று கூறினார்.

-வினிதா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

புதன் 15 செப் 2021