மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 செப் 2021

தனித்துப் போட்டி: தேமுதிக அறிவிப்பு!

தனித்துப் போட்டி: தேமுதிக அறிவிப்பு!

நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போதிய இடங்கள் கிடைக்காததால் கடைசி நேரத்தில் வெளியேறிய தேமுதிக, டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக கூட்டணியில் 60 இடங்களில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 15) விஜயகாந்த் வெளியிட்ட அறிவிப்பில், “தமிழகத்தில் நடைபெற இருக்கும் ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுகிறது. போட்டியிட விரும்புகிற அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் விருப்ப மனுக்களை அக்டோபர் 16, 17 ஆகிய இரு நாட்களில் அந்தந்த மாவட்டக் கழக தலைமை அலுவலகங்களில் பெற்று பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கான விருப்ப மனு 2 ஆயிரம் ரூபாய், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிக்கு 4ஆயிரம் ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொடுத்தது பத்து வருடக் கணக்கு: வழக்கோ ஐந்து வருடக் கணக்கு: கே.சி. ...

6 நிமிட வாசிப்பு

கொடுத்தது பத்து வருடக் கணக்கு: வழக்கோ  ஐந்து வருடக் கணக்கு: கே.சி. வீரமணி ரெய்டு குறித்து அறப்போர்!

ஆளுநரை வரவேற்ற முதல்வர்!

3 நிமிட வாசிப்பு

ஆளுநரை வரவேற்ற முதல்வர்!

விஜிலன்ஸ் ரெய்டு: கே.சி.வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?

5 நிமிட வாசிப்பு

விஜிலன்ஸ் ரெய்டு: கே.சி.வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?

புதன் 15 செப் 2021