மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 செப் 2021

தொடரும் நீட் தற்கொலைகள்: மனநல ஆலோசனை தொடக்கம்!

தொடரும் நீட் தற்கொலைகள்: மனநல ஆலோசனை தொடக்கம்!

வேலூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வில் போதிய மதிப்பெண் வராது என்ற விரக்தியில் இன்று தற்கொலை செய்து கொண்டார். அதேசமயத்தில் டிஎம்எஸ் வளாகத்தில் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் மையம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது என்பது தமிழகத்தில் தொடர் கதையாகி விட்டது. கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி மேட்டூரைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவரும், செப்டம்பர் 14ம் தேதி அரியலூரைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவியும் நீட் தேர்வு காரணமாகத் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்நிலையில் வேலூரைச் சேர்ந்த சௌந்தர்யா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தலைவராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி திருநாவுக்கரசு. இவரது மனைவி ருக்மணி. இந்த தம்பதியினரின் மகள் சௌந்தர்யா.

கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை எழுதினார். தேர்வைச் சரியாக எழுதவில்லை என சௌந்தர்யா விரக்தியிலிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது புடவையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து காட்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கடந்த நான்கு நாட்களில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் மையத்தைச் சுகாதாரத் துறை அமைச்சர் மா .சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவரே ஒரு சில மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள மன நல ஆலோசனை வழங்கும் மையத்தின் மூலம், 24 மணி நேரமும் 40 மனநல ஆலோசகர்களைக் கொண்டு நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும். இது மாணவர்கள் மன அழுத்தத்தை பரிமாறி கொள்வதற்கான ஒரு நல்ல நிகழ்ச்சியாக அமையும்.

மாணவர்களிடம் எப்படி உரையாற்றுவது என மன நல ஆலோசகர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 1 லட்சத்து 2 ஆயிரம் மாணவர்களிடம் பேச முடிவெடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 2 அல்லது 3 முறை நீட் தேர்வு எழுதியவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படவுள்ளது” என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

-பிரியா

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

10 நிமிட வாசிப்பு

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

4 நிமிட வாசிப்பு

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

புதன் 15 செப் 2021