மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 செப் 2021

தடைகளை உடைத்து தமிழினம் முன்னேற சூளுரைப்போம்: முதல்வர்!

தடைகளை உடைத்து தமிழினம் முன்னேற சூளுரைப்போம்: முதல்வர்!

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அண்ணாவின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னாள் முதல்வர் அண்ணாவின் 113 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்தி எதிர்ப்பு, சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம், சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என சூட்டியது ஆகியவை அண்ணாவின் சாதனைகளாகும்.

இந்நிலையில் அவரது 113வது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து வள்ளுவர் கோட்டம் சென்று அங்கு உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும், அதற்கு கீழே வைக்கப்பட்டுள்ள அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து அண்ணா அறிவாலயத்துக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் அண்ணா மற்றும் கலைஞர் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வின்போது அமைச்சர்கள் துரைமுருகன், ஐ. பெரியசாமி, கே.என். நேரு,பொன்முடி மற்றும் கனிமொழி எம்.பி., உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ ஆகியோர் உடன் இருந்தனர்.

அண்ணாவின் பிறந்த நாள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,

“அன்பால் தமிழ்நாட்டை ஆண்ட பெரியாரின் கொள்கை கைத்தடி; ஆயிரமாண்டு ஆரியமாயை பொசுக்கிய அறிவுத் தீ, இந்தித் திணிப்புக்கு எதிராக பாய்ந்த தமிழ் ஈட்டி; டெல்லிக்கு திகை பூட்டிய திராவிட போராளி பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்தநாளில் தடைகளை உடைத்து தமிழினம் முன்னேற சூளுரைப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அண்ணாவை நினைவுகூர்ந்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நம் கழகத்தின் முதல் பெயர்... திராவிட கொள்கைகளை சென்னை மாகாணத்தில் வேர் ஊன்ற வைத்து அதை தமிழ் நாடாக மாற்றிய புரட்சியாளர்... சமூகநீதியை மேடைப்பேச்சிலிருந்து கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் விதைத்த பேரறிஞர் அவர்களின் 113ஆவது பிறந்த நாளில் அண்ணா நாமம் வாழ்க என்று வணங்கி போற்றுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

-பிரியா

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர் ...

4 நிமிட வாசிப்பு

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர்  முருகன்

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

3 நிமிட வாசிப்பு

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

புதன் 15 செப் 2021