மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 செப் 2021

தமிழகம் முழுவதும் ஜவுளிக் கடைகளில் ரெய்டு!

தமிழகம் முழுவதும் ஜவுளிக் கடைகளில் ரெய்டு!

தமிழகம் முழுவதும் பிரபல ஜவுளிக் கடைகளில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை வணிக வரித்துறை ரெய்டு நடைபெற்றது.

ஜவுளிக் கடைகள் போலியான ஆவணங்கள் தயாரித்து வணிக வரி ஏய்ப்பு செய்ததாக வணிகவரித் துறைக்குப் புகார்கள் வந்தன. ஜவுளிக் கடைகள் விற்பனை மற்றும் கொள்முதலைக் குறைத்துக் காட்டி போலியான ஆவணங்கள் மூலம் குறைவான வரியைக் கட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் சென்னையில் 39 கடைகள், நெல்லையில் 15 கடைகள், கோவை, மதுரையில் தலா 13 கடைகள் எனத் தமிழகம் முழுவதும் 130க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

சென்னை சில்க்ஸ், ஆர்எம்கேவி, போத்தீஸ், நல்லி சில்க்ஸ், ஆனந்தம் ரீட்டைல்ஸ் பி. லிட், உட்பட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

ஒவ்வொரு இடத்திலும் தலா 4 பேர் கொண்ட அதிகாரிகள், ‘வரி ஏய்ப்பு நடைபெற்று இருக்கிறதா’ என சோதனை நடத்தினர். மாலையில் தொடங்கிய சோதனை நள்ளிரவு வரையிலும் நீடித்தது. இன்றும் சோதனை தொடரும் என்று வணிகவரித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சோதனையின் முடிவில் வரி ஏய்ப்பு செய்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வணிகவரித் துறை திட்டமிட்டுள்ளது.

-பிரியா

கொடுத்தது பத்து வருடக் கணக்கு: வழக்கோ ஐந்து வருடக் கணக்கு: கே.சி. ...

6 நிமிட வாசிப்பு

கொடுத்தது பத்து வருடக் கணக்கு: வழக்கோ  ஐந்து வருடக் கணக்கு: கே.சி. வீரமணி ரெய்டு குறித்து அறப்போர்!

ஆளுநரை வரவேற்ற முதல்வர்!

3 நிமிட வாசிப்பு

ஆளுநரை வரவேற்ற முதல்வர்!

விஜிலன்ஸ் ரெய்டு: கே.சி.வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?

5 நிமிட வாசிப்பு

விஜிலன்ஸ் ரெய்டு: கே.சி.வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?

புதன் 15 செப் 2021