மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 செப் 2021

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ? ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி!

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ?  ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி!

திமுக மகளிரணிச் செயலாளரும், திமுக மக்களவை குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்பி நேற்று (செப்டம்பர் 14) திருவள்ளூர் மாவட்டத்தில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம், திருத்தணியில், மாநிலங்களவை உறுப்பினராக இருந்த போது ஒதுக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் கட்டப்பட்ட உயர் மின் கோபுர விளக்கைத் திறந்து வைத்தார். அகரமேல் ஊராட்சியிலும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இதில் பேசிய கனிமொழி எம்.பி,

“எந்தக் காலகட்டத்தில் மக்களுக்கு நிதி தேவையோ அந்த நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினரின் நிதியை அதிகப்படுத்துவதற்கு பதிலாக நிறுத்தப்பட்டிருக்கிறது. மத்தியிலே கூட்டாட்சி என்று அண்ணா சொன்னார். ஆனால் இன்றைக்கு  இருக்கும் ஒன்றிய அரசு அதிகாரங்களை எல்லாம் குவித்து  வைத்துக் கொண்டு, நாங்களே எல்லா உரிமைகளையும் வைத்திருப்போம் என்று நினைக்கக் கூடிய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆனால், இங்கே சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுவதைக் கேட்கும்போது பேசாமல் சட்டமன்ற உறுப்பினர் ஆகியிருக்கலாமோ என்று தோன்றக் கூடிய அளவுக்கு இருந்தது. ஒன்றிய அரசாங்கம் கொரோனாவை காரணம் காட்டி எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்துவிட்டது. இந்த நேரத்தில் நம்முடைய தலைவர் அவர்கள் மக்களின் அடிப்படைத் தேவையை புரிந்துகொண்டு சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி மூன்று கோடி ரூபாயை பயன்படுத்தும் உரிமையை சட்டமன்ற உறுப்பினர்களுக்கே வழங்கும் முத்தாய்ப்பான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

நிதியே இல்லை என்று சொல்லக் கூடிய நிலையில் மக்களவை உறுப்பினர்களூம், மாநிலங்களவை உறுப்பினர்களூம் நின்றுகொண்டிருக்கிறோம். அதனால் இன்று இந்தியாவின் எல்லா மாநிலங்களையும் விட தமிழ்நாட்டில் இருப்பதுதான் மக்களுக்கும் சரி,அரசியல்வாதிகளுக்கும் சரி, ஊடகத்தினருக்கும் சரி பாதுப்பான சூழலாக இருக்கும்” என்று பேசிய கனிமொழி,

“நம் பிள்ளைகள் மருத்துவப் படிப்பு படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரி கொண்டுவரப்பட்டது. ஆனால் நீட் தேர்வை திணித்து நம் பிள்ளைகளுக்காக கொண்டுவந்த மருத்துவக் கல்லூரிகளில் நம் பிள்ளைகள் படிக்க முடியாத நிலையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதையெல்லாம் உடைத்து   நம் பிள்ளைகளை மீண்டும்  மருத்துவப் படிப்புகளை படிக்க வைப்பதற்காகத்தான் நீட் விலக்கு தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதில் முதல்வர் நிச்சயம் வெற்றிபெறுவார்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

-வேந்தன்

கொடுத்தது பத்து வருடக் கணக்கு: வழக்கோ ஐந்து வருடக் கணக்கு: கே.சி. ...

6 நிமிட வாசிப்பு

கொடுத்தது பத்து வருடக் கணக்கு: வழக்கோ  ஐந்து வருடக் கணக்கு: கே.சி. வீரமணி ரெய்டு குறித்து அறப்போர்!

ஆளுநரை வரவேற்ற முதல்வர்!

3 நிமிட வாசிப்பு

ஆளுநரை வரவேற்ற முதல்வர்!

விஜிலன்ஸ் ரெய்டு: கே.சி.வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?

5 நிமிட வாசிப்பு

விஜிலன்ஸ் ரெய்டு: கே.சி.வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?

புதன் 15 செப் 2021