மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 செப் 2021

தலைமை செயலாளரின் வேண்டுகோள்!

தலைமை செயலாளரின் வேண்டுகோள்!

மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

மக்கள் தங்களுடைய கோரிக்கைகளை நேரடியாக முதல்வருக்கே தெரிவிக்கும் வகையில் முதல்வர் தனிப்பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் ஆன்லைன் மற்றும் நேரடி என இரண்டு முறைகளிலும் புகார் அளிக்கலாம். இருந்தாலும் பெரும்பாலான மக்கள் நேரிடையாகவே வந்து புகார் மனு அளித்தால்,விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எண்ணத்தில் நேரில் வந்து மனு அளிக்கின்றனர். முதல்வர் பிரிவுக்கு வரும் மனுக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நேற்று (செப்டம்பர் 14) கடிதம் ஒன்று எழுதினார். அதில், “மக்களுடைய பிரச்சினைகளை மாவட்ட அளவிலேயே தீர்த்து வைக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட அளவில் பிரச்சினைகளைத் தீர்க்காத காரணத்தினால் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு நாள்தோறும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் குவிகின்றன.

மாவட்டம், வட்டம், சிற்றூர் அளவிலேயே தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள், உரிய காலத்தில் தீர்க்கப்படாமலிருப்பதால் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு அவர்கள் குக்கிராமங்களில் இருந்து கோட்டையை நோக்கி புறப்பட்டு விடுகிறார்கள். கனவுகள் நிறைந்த கண்களோடும், கவலைகள் நிறைந்த இதயத்தோடும், அவர்கள் காத்திருப்பதை பார்க்கும்போது மனம் கனக்கிறது. எனவே விரிவான ஆய்வின் மூலம் மாவட்ட அளவிலான பிரச்சினைகளை மாவட்ட அளவிலே தீர்த்துவைக்க மாவட்ட ஆட்சியர்கள் முனைய வேண்டும்.

முனைப்பாகவும், பணிவோடும் செயல்பட்டால் அவர்கள் தலைமை செயலகத்தின் கதவுகளை தட்ட வேண்டிய தேவை எழாது. இலக்குகளை அடைவது மட்டுமல்ல, மக்கள் இதயங்களை குளிர்விப்பதும் அரசுப்பணியின் ஓர் அம்சமே.

அதிக மனுக்களைத் தீர்த்துவைக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கு கேடயம் வழங்குவதை விட குறைவான மனுக்கள் எந்த மாவட்டத்திலிருந்து வருகிறதோ அவர்களுக்கு கேடயம் அளிக்கும் நடைமுறையை கொண்டு வரும் அளவுக்கு உங்கள் பணி இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

கொடுத்தது பத்து வருடக் கணக்கு: வழக்கோ ஐந்து வருடக் கணக்கு: கே.சி. ...

6 நிமிட வாசிப்பு

கொடுத்தது பத்து வருடக் கணக்கு: வழக்கோ  ஐந்து வருடக் கணக்கு: கே.சி. வீரமணி ரெய்டு குறித்து அறப்போர்!

ஆளுநரை வரவேற்ற முதல்வர்!

3 நிமிட வாசிப்பு

ஆளுநரை வரவேற்ற முதல்வர்!

விஜிலன்ஸ் ரெய்டு: கே.சி.வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?

5 நிமிட வாசிப்பு

விஜிலன்ஸ் ரெய்டு: கே.சி.வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?

புதன் 15 செப் 2021