மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 செப் 2021

ராஜ்யசபா: காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

ராஜ்யசபா:  காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையான ராஜ்ய சபாவுக்கு கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்த நிலையில்... தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட இரண்டு ராஜ்யசபா இடங்களுக்கு திமுக தனது வேட்பாளர்களை இன்று அறிவித்துள்ளது.

அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்பிகளாக இருந்த கே.பி.முனுசாமி, ஆர். வைத்திலிங்கம் ஆகியோர் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் தங்களது ராஜ்யசபா எம்பி பதவிகளை ராஜினாமா செய்தனர். இதையடுத்து ராஜ்யசபாவில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் கே.பி. முனுசாமி, ஆர். வைத்திலிங்கம் ஆகிய வரிசையில் பெயர்கள் பட்டியல் இடப்பட்டிருந்தன. கே.பி. முனுசாமியின் பதவிக்காலம் 2026 ஆம் ஆண்டு வரை இருக்கிறது. வைத்திலிங்கத்தின் பதவிக்காலம் 2022ஆம் ஆண்டு வரைதான் இருக்கிறது..

இந்த வகையில் திமுக வேட்பாளர்களாக மறைந்த திமுகவின் முன்னோடி தலைவர் வி.வி.என். சோமுவின் பேத்தி கனிமொழிக்கும் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் குமாருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திமுகவின் வேட்பாளர் அறிவிப்பின்படி பார்த்தால் கே.பி. முனுசாமியின் இடத்தில் கனிமொழிக்கு 2026 ஆம் ஆண்டு வரையும், வைத்திலிங்கத்தின் இடத்தில் ராஜேஷ் குமாருக்கு 2022ஆம் ஆண்டு வரையும் ராஜ்யசபா பதவி வழங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

இதனிடையே அண்மையில் அதிமுகவின் ராஜ்யசபா உறுப்பினர் முஹம்மது ஜான் மறைந்த நிலையில் அந்த எம்.பி. பதவி திமுக சார்பில் புதுக்கோட்டை அப்துல்லாவுக்கு கொடுக்கப்பட்டது. இப்பொழுது ஏற்பட்ட இரண்டு ராஜ்யசபா வெற்றிடங்களுக்கும் திமுகவே தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது,

இந்த மூன்று ராஜ்யசபா இடங்களில் ஏதேனும் ஒன்றை காங்கிரஸ் கட்சி தனக்கு கேட்டிருந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரிக்காக காங்கிரஸ் தலைமை கேட்டதாகவும் பேசப்பட்டது . ஆனால் , “இப்போதைக்கு உருவாகி இருக்கக்கூடிய ராஜ்யசபாவின் 3 இடங்களும் அதிமுக உறுப்பினரின் மறைவு மற்றும் அதிமுக உறுப்பினர்களின் ராஜினாமா இவற்றால் ஏற்பட்டது. இவை இடைக்கால ராஜ்யசபா இடங்கள்தான். எனவே இயல்பாக வரக்கூடிய அடுத்த ராஜ்யசபா தேர்தலில் உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்” என்று காங்கிரசிடம் திமுக தெரிவித்து தற்போதைக்கு கதவு சாத்தி விட்டதாக கூறுகிறார்கள் திமுக வட்டாரங்களில்.

-வேந்தன்

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர் ...

4 நிமிட வாசிப்பு

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர்  முருகன்

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

3 நிமிட வாசிப்பு

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

செவ்வாய் 14 செப் 2021