மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 செப் 2021

சென்னை டூ குமரி -கப்பல் பயணத்துக்குப் பரிசீலனை : எ.வ.வேலு

சென்னை டூ குமரி -கப்பல் பயணத்துக்குப் பரிசீலனை : எ.வ.வேலு

சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள ஒவ்வொரு துறைமுகத்திற்கும் சிறிய கப்பல் மூலம் உல்லாச பயணம் போய் வர அனுமதிக்க முடியுமா என்பது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என்று தமிழ்நாடு கடல்சார் வாரிய கூட்டத்தில் அமைச்சர் எ.வ. வேலு பேசினார்.

தமிழ்நாடு கடல்சார் வாரிய 93வது கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் நடைபெற்றது.

அப்போது பேசிய அமைச்சர், “ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் 3 பெரிய துறைமுகங்களும், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் 6 சிறிய துறைமுகங்களும், 11 தனியார் அரசு கூட்டுத் துறைமுகங்களும் உள்ளன.

சென்னையில் இருப்பது போன்று மற்ற இடங்களிலும் பொதுமக்களுக்குத் தேவையான பொழுதுபோக்கு வசதிகள் தற்போது இல்லாத நிலை உள்ளது. எனவே பிற இடங்களிலும் பொழுதுபோக்கு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டியது அவசியமாகிறது.

கடற்கரைகளையும், கடல் அலைகளையும், நீண்டு, பரந்து விரிந்துள்ள நீலக்கடலையும் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து மகிழும் மக்களுக்குப் பாதுகாப்புடன் கூடிய நீர் விளையாட்டுகள் உட்பட பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளையும் கடற்கரை பகுதிகளில் அமைத்துக் கொடுத்தால் மக்கள் மேலும் உற்சாகம் அடைவார்கள்.

கடலுக்குள், கடலின் ஆழம், கடல் அலைகளின் தன்மை ஆகியவற்றிற்கு ஏற்ப எங்கெல்லாம் படகு போக்குவரத்தை நடத்த அனுமதிக்கலாமோ அங்கெல்லாம் ஆய்வு செய்து படகுப் போக்குவரத்துகளை அனுமதிப்பது குறித்து பரிசீலனை செய்யலாம்.

தற்போதைய நிதி நிலைமை இதற்கெல்லாம் ஒத்துழைக்குமா என்பது சந்தேகமே. வெளிநாடுகளில் உள்ளது போன்ற நீர் விளையாட்டுகள், போட்டிங் போன்றவற்றைத் தனியார் முதலீடு மூலம் மேற்கொள்ளலாமா என்பதையும் இந்த வாரியம் ஆய்வு செய்ய வேண்டும்.

கடல்நீரில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது அனைவரும் விரும்பக் கூடியது. சிறிய கப்பல் மூலம் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை ஒவ்வொரு துறைமுகத்திற்கும் உல்லாச பயணம் போய் வர அனுமதிக்க முடியுமா என்பதையும் இந்த வாரியம் பரிசீலிக்க வேண்டும்.

சென்னையிலிருந்து இலங்கை தலைமன்னாருக்கு நேரடியாகச் செல்லும் வகையில் ராமேஸ்வரம் போட் மெயில் ரயில் சேவையும் அதன் தொடர்ச்சியாகக் கப்பல் சேவையும் நடைமுறையிலிருந்தது. தற்போது அத்தகைய ரயில் சேவை தொடங்குவது குறித்தும் வாரியம் ஆய்வு செய்ய வேண்டும்” என்று கூறினார்.

இந்த கூட்டத்தில் பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் சந்தீப் சக்சேனா, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், கடல்சார் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

-பிரியா

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்: உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் ...

8 நிமிட வாசிப்பு

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்:  உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி -  எம்.பி. தேர்தலில் திமுக கூட்டணி!

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ? ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி! ...

4 நிமிட வாசிப்பு

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ?  ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி!

ராஜ்யசபா: காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

3 நிமிட வாசிப்பு

ராஜ்யசபா:  காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

செவ்வாய் 14 செப் 2021