மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 செப் 2021

விண்ணப்பித்த அனைவருக்கும் சீட்: அமைச்சர் பொன்முடி!

விண்ணப்பித்த அனைவருக்கும் சீட்: அமைச்சர் பொன்முடி!

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைக்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

பி.இ, பி.டெக் போன்ற பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு கடந்த சில நாட்களாக ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து இன்று(செப்டம்பர் 14) தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக இந்தாண்டு ஒரு லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில், ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 45 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தியிருந்தனர். அவர்களில் 2 ஆயிரத்து 722 மாணவர்கள் சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை. பெறப்பட்ட விண்ணப்பங்களில் 3ஆயிரத்து 290 மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி,” கடந்தாண்டு தமிழ்நாட்டில் 461 பொறியியல் கல்லூரிகள் இருந்தன. தற்போது 21 கல்லூரிகளின் அனுமதி மறுக்கப்பட்டதால், 440 கல்லூரிகள் கலந்தாய்வில் பங்கேற்கின்றன. இந்த கல்லூரிகளில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்கள் உள்ளன. பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பத்தவர்களில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 83 மாணவர்கள் தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இதில் 87 ஆயிரத்து 291 மாணவர்கள், 51 ஆயிரத்து 730 பேர் மாணவிகள். இன்னும் 20 ஆயிரம் இடங்கள் உள்ளன. அதனால், விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் இடம் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

நாளை முதல் பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கவுன்சிலிங் தொடங்குகிறது. செப்டம்பர் 17ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் நாளை முதலே தொடங்குகிறது. முதல்கட்டமாக சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும். கடந்தாண்டு கவுன்சிலிங் ஒரு முறைதான் நடைபெற்றது. இந்தாண்டு பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பதற்காக ஐந்து முறை கவுன்சிலிங் நடத்தப்படும்.

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு அமலுக்கு வரும். செப்டம்பர் 18ஆம் தேதி பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைப்பார்.

பொறியியல் படிப்புக்காக அரசு பள்ளிகளிலிருந்து 15 ஆயிரத்து 161 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பொறியியல் படிப்புகளில் இடங்கள் ஒதுக்கப்படும். அதன்படி 15 ஆயிரம் பேரில் சுமார் 11 ஆயிரம் பேருக்கு இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சான்றிதழைச் சமர்ப்பிக்காத 3290 விண்ணப்பதாரர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது. இதை அவர்கள் சரியாக செய்திருக்க வேண்டும். அவர்களுக்குத் தனியாக கலந்தாய்வு நடத்தப்பட வாய்ப்பில்லை” என்று கூறினார்.

மேலும், சட்டபேரவையில் இந்தாண்டு 21 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இக்கல்லூரிகள் அடுத்த கல்வியாண்டில் தொடங்கப்படும். இந்த ஆண்டில் கல்லூரிகளை தொடங்குவதற்கு சாத்தியமில்லை” என்று கூறினார்.

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர் ...

4 நிமிட வாசிப்பு

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர்  முருகன்

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

3 நிமிட வாசிப்பு

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

செவ்வாய் 14 செப் 2021