மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 செப் 2021

கொடநாடு: வெளியே வரும் மனோஜ் எடப்பாடிக்கு எதிராகப் பேசுவாரா?

கொடநாடு: வெளியே வரும் மனோஜ்  எடப்பாடிக்கு எதிராகப் பேசுவாரா?

கொடநாடு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பத்து பேர்களில் ஒன்பது பேர் தற்போது ஜாமீனில் இருக்கிறார்கள். ஆனால் வாளையார் மனோஜ் மட்டும் இன்னும் குன்னூர் கிளைச் சிறையில் இருக்கிறார்.

காரணம் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் கொடுத்தும் கூட அதன் நிபந்தனைகளை அவர் பூர்த்தி செய்யவில்லை. அதாவது கோவை அல்லது நீலகிரியை சேர்ந்த இரண்டு பேர் ஜாமீனுக்கான உத்தரவாதம் தர வேண்டும், அவர்கள் 50 ஆயிரம் ரூபாய் சொத்துக்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என ஜாமீனுக்கான நிபந்தனைகளை நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. ஆனால் வாளையார் மனோஜுக்கு நீலகிரி அல்லது கோவை மாவட்டத்தில் இருந்து ஷ்யூரிட்டி சமர்ப்பிக்க யாரும் முன்வரவில்லை. அவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்காக ஜாமீன் எடுக்க யாரும் முன் வரவில்லை.

இந்த நிலையில் வாளையார் மனோஜின் வழக்கறிஞர் முனிரத்தினம் உதகமண்டலம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியிடம், “நீலகிரி, கோவையில் உள்ளவர்கள் ஜாமீன் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையைத் தளர்த்தி கேரளாவில் உள்ள அவரது ரத்த சொந்தங்கள் உத்தரவாதம் அளிக்க அனுமதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி சஞ்சய் பாபா, “ 50 ஆயிரம் ரூபாய் பிணைத் தொகையோடு மனோஜின் ரத்த சொந்தங்கள் உத்தரவாதம் அளித்தால் அவருக்கு ஜாமீன் அளிக்கலாம்” என்று இன்று (செப்டம்பர் 14) தீர்ப்பளித்தார்.

இதையடுத்து மனோஜின் ரத்த சொந்தங்கள் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்டு இன்னும் ஓரிரு தினங்களில் வாளையார் மனோஜ் வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாளையார் மனோஜ் எடப்பாடிக்கு ஆதரவாக இருப்பார் என்று சில நாட்களாகவே செய்திகள் வெளிவந்தன.

இதை மோப்பம் பிடித்த அரசுத் தரப்பு, “உங்களது ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்துவதில் நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டோம். ஆனால் அதற்கு பதிலாக நீங்கள் எடப்பாடிக்கு ஆதரவாக பேசிவிடக் கூடாது”என்று டீல் பேசியிருக்கிறார்கள் என்றும், அதன் விளைவாகவே அரசுத் தரப்பு இந்த ஜாமீன் தளர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் ஊட்டி வழக்கறிஞர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வாளையார் மனோஜ் எடப்பாடிக்கு ஆதரவாக பேசப் போகிறாரா எதிராகப் பேசப் போகிறாரா என்பது அவர் ஜாமீனில் வெளியாகும் சில நாட்களுக்குள் தெரிந்துவிடும்.

-வேந்தன்

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

செவ்வாய் 14 செப் 2021