மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 செப் 2021

இரண்டு கட்ட உள்ளாட்சித் தேர்தல்:அதிமுக எதிர்ப்பு!

இரண்டு கட்ட உள்ளாட்சித் தேர்தல்:அதிமுக எதிர்ப்பு!

தமிழக ஆளுநராக இருந்து பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்ட பன்வாரிலால் புரோகித்தை நேற்று (செப்டம்பர் 13)தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் இன்று (செப்டம்பர் 14) முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆளுநர் மாளிகைக்கு சென்று பன்வாரிலால் புரோகித்தை வாழ்த்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் சென்றனர்.

சந்திப்பு முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அவரிடம், தமிழக உள்ளாட்சித் தேர்தல் இரு கட்டங்களாக நடத்தப்படுவது பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், “கடந்த காலங்களில் உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாகத்தான் நடந்திருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றபோது இந்த அஜெண்டாவே பேசப்படவில்லை. ஒரு கட்டமாக நடத்தலாமா இரு கட்டமாக நடத்தலாமா என்று அன்றைக்கு பேசவே இல்லை.அப்படியென்றால் இதை ஹிடன் அஜெண்டாவாக வைத்து ரகசியமாக வைத்து அறிவித்திருக்கிறார்கள். ஒரு இடத்தில் தேர்தல் நடந்து முடிந்த பிறகு இன்னொரு இடத்தில் ஆட்களைக் கொண்டுவந்து கள்ள ஓட்டு போடுவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கும்”என்றார் ஜெயக்குமார்.

ஒரே மாவட்டத்தில் சில ஒன்றியங்களுக்கு முதல் கட்டமாக அக்டோபர் 6 ஆம் தேதியும், மீதியுள்ள ஒன்றியங்களுக்கு அக்டோபர் 9 ஆம் தேதியும் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுவரைக்கும் தமிழ்நாடு வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் கூட உள்ளாட்சித் தேர்தல் இரு கட்டமாக நடத்தப்பட்டதில்லை.

இதுபற்றி நாம் சில திமுக பிரமுகர்களிடம் பேசியபோது பெயர் வெளியிட விரும்பாத அவர்கள், “ஒரே மாவட்டத்தில் சில கிலோ மீட்டர்கள் இடைவெளியில் உள்ள பகுதிகளில் கூட இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது திமுகவுக்கு சாதகமான விஷயம்தான். நூறு சதவிகித வெற்றிக்காகத்தான் இந்த இரு கட்டத் தேர்தல்” என்கிறார்கள் சிரித்துக் கொண்டே.

-வேந்தன்

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...

12 நிமிட வாசிப்பு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

7 நிமிட வாசிப்பு

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

செவ்வாய் 14 செப் 2021