மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 செப் 2021

ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதா!

ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதா!

சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மருத்துவம், பல்மருத்துவம் படிப்புகளில் சேர விரும்பும் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களின் நம்பிக்கையையும் கனவுகளையும் நீட் தேர்வு தகர்த்து வருகிறது. இதன் மீதான அச்சம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்று பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கையை நடத்தும் வகையிலான மசோதாவை முதல்வர் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

இதற்கு பாஜக மட்டும் எதிர்ப்பு தெரிவித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்தது. அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா 24 மணி நேரத்தில் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மாணவர்கள் நீட் தேர்வு அச்சத்தின் காரணமாகத் தற்கொலை செய்து கொள்வது வருத்தமளிக்கிறது. மாணவர்களின் குடும்பத்திற்கு எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் இழப்பீடு கொடுத்தாலும் போன உயிர் திரும்ப வராது. மாணவர்கள் தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம்.

கடந்த ஆட்சியில் நீட் தேர்வுக்கு எதிராகக் கொண்டு வந்த சட்ட முன்வடிவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை அதனைத் திருப்பி அனுப்பி உள்ளார் என்பதைப் பேரவையில் கடந்த ஆட்சியாளர்கள் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில்தான் திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதைப் போல நீட் விலக்கு மசோதா நேற்று சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

2017 இல் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுக்கும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள நீட் விலக்கு சட்ட முன்வடிவுக்கும் வேறுபாடுகள் உள்ளது.

உரியத் தரவுகளை விரிவாக ஆராயாமல் தான் 2017இல் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது தாக்கல் செய்யப்பட்ட இந்த சட்ட முன்வடிவானது, நீட் தேர்வு முறையால் சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்தும் , அதனை சரி செய்வது குறித்தும், மாணவர் சேர்க்கை முறைகளை வகுத்து அதைச் சாத்தியப் படுத்துவது குறித்தும், அதற்கான சட்ட வழிமுறைகளைப் பற்றியும் முழுமையாக ஆராய்ந்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதா ஆளுநர் கையெழுத்திட நேற்றே ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் கையெழுத்திட்டவுடன் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் என்றார்.

-பிரியா

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...

12 நிமிட வாசிப்பு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

7 நிமிட வாசிப்பு

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

செவ்வாய் 14 செப் 2021