மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 செப் 2021

எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு வீடியோ இல்லையா? - வானதி கேள்வி

எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு வீடியோ இல்லையா? - வானதி கேள்வி

தமிழக 16ஆவது சட்டப்பேரவையின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்றுடன் (செப்டம்பர் 13) நிறைவுப் பெற்றுள்ளது. பாஜகவின் நான்கு உறுப்பினர்களில் ஒருவராக இடம்பெற்றுள்ள வானதி சீனிவாசன், “சட்டமன்றத்தை 100 சதவிகிதம் பயன்படுத்திக்கொண்டேன்” என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

முதல் கூட்டத் தொடரின் அனுபவங்களை விரிவாகப் பதிவு செய்துள்ளார் வானதி சீனிவாசன்.

“சட்டப்பேரவையில் முதல் முறையாக ஒரு உறுப்பினர் பேசுவதை 'கன்னிப் பேச்சு' என்று குறிப்பிடும் வழக்கம் உள்ளது. இளம் பெண்களின் பெண்மையைக் குறிக்கும் இந்த வார்த்தைக்குப் பதிலாக 'முதல் பேச்சு’, 'அறிமுக உரை' என்று குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும் என்று கோரிக்கை விடுத்தேன். எனது இந்தக் கோரிக்கையை பரிசீலிப்பதாக பேரவைத் தலைவர் திரு.மு.அப்பாவு பதிலளித்திருந்தார். ஆனால், கடைசிவரை எனது கோரிக்கை ஏற்கப்படவில்லை என்ற வருத்தம் இருக்கவே செய்கிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “கோவை மெட்ரோ ரயில் திட்டம், டி.கே.மார்க்கெட் பகுதியில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், தங்க நகை தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள், Cluster அமைக்க வேண்டும், கோவை மத்திய சிறையையொட்டிய பகுதியில் பூங்கா அமைக்க அமைக்க வேண்டும் என்று எனது தொகுதிகளுக்கான கோரிக்கைகளை முன்வைத்தேன்.

அது மட்டுமல்லாது... தமிழக விடுதலைப் போராட்ட வீரர்கள் குறித்து தகவல்களை அனைவரும் தெரிந்து கொள்ள வசதியாக அருங்காட்சியகம் அமைக்க வேண்டு்ம், பெண்களுக்குத் தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தேன்” என்று தனது தொகுதி மற்றும் மாவட்டம் மற்றும் மாநிலம் தழுவிய கோரிக்கைகளைச் சுட்டிக்காட்டிய வானதி சீனிவாசன்,

“ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 21ஆம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்த முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் செப்டம்பர் 13ஆம் தேதியோடு பேரவை நிகழ்வுகள் முடித்துக் கொள்ளப்பட்டன. இந்த நாள் குறைப்பால் ஒரே நாளில் 3 அல்லது 4 துறைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதனால் விவாதத்தில் பேசும் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. திட்டமிட்டப்படி செப்டம்பர் 21ஆம் தேதி வரை சட்டப்பேரவை நடந்திருந்தால் மேலும் ஒரு மானியக் கோரிக்கை விவாதத்தில் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். என்னைப் பொறுத்தவரை கிடைத்த வாய்ப்பை 100 சதவிகிதம் பயன்படுத்தியிருக்கிறேன்.

சட்டப்பேரவை நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று பாஜக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை அவர்களும் இதனை வலியுறுத்தி அறிக்கை வெளியி்ட்டுள்ளார். கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வோம்’ என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்தும் அதனை செயல்படுத்தவில்லை.

சட்டப்பேரவையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி பேசும் வீடியோக்கள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. அதை அவர்கள் சமூக ஊடகங்களில் பகிர்கிறார்கள். ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும் வீடியோக்கள் வழங்கப்படுவதில்லை” என்றும் தெரிவித்துள்ளார் வானதி சீனிவாசன்.

-வேந்தன்

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

செவ்வாய் 14 செப் 2021