மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 செப் 2021

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எப்படிச் செயல்பட வேண்டும்?: அமைச்சர் பேட்டி!

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எப்படிச் செயல்பட வேண்டும்?: அமைச்சர் பேட்டி!

தனியார் பள்ளி ஆசிரியர்களுடன் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் போட்டி போட்டு மாணவர்களைத் திறம்பட வளர்க்க வேண்டும் என்று தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.

நேற்று (செப்டம்பர் 13) கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து பேசிய அவர், “முதல்வர் பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து 23,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மாணவர்கள் நேரடி வகுப்புகள் இல்லாமல் ஆன்லைனில் பாடம் கற்கின்றனர். செல்போனில் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். அதனால் மாணவர்களை நல்லொழுக்கப்படுத்துவது ஆசிரியரின் கையில்தான் உள்ளது. ஒவ்வொரு பள்ளி வளாகத்தையும் சுத்தமாக வைப்பது அந்தந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களின் பொறுப்பாகும்.

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தை நினைத்து பாருங்கள். தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் 1.25 லட்சம் சம்பளம் வாங்குகின்றனர். அதுவே தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் மாதம் ஏழாயிரம், எட்டாயிரம் என்ற வகையில் சம்பளம் பெற்று பணியாற்றுகின்றனர். ஆனால் அங்கு படிக்கக் கூடிய மாணவர்கள் இன்ஜினீயரிங், மருத்துவர், பல் மருத்துவர் போன்ற உயர் படிப்புகளில் நல்ல இடத்தைப் பிடிக்கின்றனர். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்தான் அதிக மதிப்பெண்கள் பெறுகின்றனர்.

தனியார் பள்ளி ஆசிரியர்கள் போன்று அரசுப் பள்ளி ஆசிரியர்களும் போட்டி போட வேண்டும். அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களையும் நான் குறிப்பிடவில்லை. சில அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாணவர்களைத் திறம்பட வளர்த்திருக்கிறார்கள். சிலர் இரவில் உட்கார்ந்தும் மறுநாளுக்கு தேவையான பாடத் திட்டங்களைத் தயாரிக்கின்றனர். அதுபோன்று ஒவ்வோர் ஆசிரியரும் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும்” என்று கூறினார்.

-வினிதா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

செவ்வாய் 14 செப் 2021