மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 செப் 2021

அக்டோபர் 6, 9 இல் உள்ளாட்சித் தேர்தல்!

அக்டோபர் 6, 9 இல் உள்ளாட்சித் தேர்தல்!

தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் அக்டோபர் 6, 9 தேதிகளில் நடைபெற இருக்கின்றன. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று (செப்டம்பர் 13) வெளியிட்டார்.

சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவுற்ற நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் ஆணையர் பழனிகுமார்,

“உச்ச நீதிமன்றம் 22-6-21 அன்று வழங்கிய ஆணையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர். ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட உள்ளாட்சித் தேர்தல்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு 15-9 க்குள் தேர்தல் முடிவுகளை அறிவிக்குமாறு ஆணையிடப்பட்டிருந்தது.

மேற்படி மாவட்டங்களுக்கு உட்பட்ட வார்டுகள் மறு வரையறை செய்யப்பட்ட அறிக்கை 3-8-21 அன்று வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குச் சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் பின் வாக்காளர் பட்டியல் தயாரித்து ஆகஸ்டு 31 அன்று வெளியிடப்பட்டது.

அதன் பின் 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 6, அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதற்கான அறிவிக்கை செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியிடப்படும்.

வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கும். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசிநாள் செப்டம்பர் 22. மனுக்கள் பரிசீலனை செப்டம்பர் 23. மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் செப்டம்பர் 25. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12.

வாக்குப் பதிவு நேரம் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசித்து காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்க உள்ளது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா அறிகுறி உள்ளவர்களும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களும் அனுமதிக்கப்படுவார்கள்.” என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார்.

முதல் கட்டத் தேர்தல் அக்டோபர் 6

ஒன்பது மாவட்டங்களில் 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 78 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கும், 755 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கும், 1577 கிராம ஊராட்சித் தலைவர், 12 255 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கும் முதல் கட்டத் தேர்தல் நடத்தப்படும்.

இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு அக்டோபர் 9

ஒன்பது மாவட்டங்களில் உள்ள 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட மீதி இடங்களுக்கு அக்டோபர் 9 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும்.

9 மாவட்டங்களில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரமுள்ள சுற்றுப் புறப் பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்.

-வேந்தன்

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

திங்கள் 13 செப் 2021