மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 செப் 2021

உள்ளாட்சித் தேர்தல் அட்டவணை: இன்று மாலை அறிவிப்பு!

உள்ளாட்சித் தேர்தல் அட்டவணை: இன்று மாலை அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் தேதி இன்று (செப்டம்பர் 13) மாலை அறிவிக்கப்படுகிறது.

சட்டமன்றக் கூட்டத் தொடர் இன்றோடு நிறைவடையும் நிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இன்று மாலை 5 மணிக்கு பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளது. அரும்பாக்கத்தில் இருக்கும் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் செய்தியாளர்களை சந்திக்கிறார்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்காளர் பட்டியல், வாக்களிக்கும் நேரம் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்ட தேர்தல் ஆணையம் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. இதன் அடிப்படையிலும் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதற்கு முன்னர் செபடம்பர் 5 ஆம் தேதி திமுக தலைமையகமான அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தேர்தல் நடைபெறும் ஒன்பது மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்களை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். அதேபோல அதிமுகவும் ஒன்பது மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியது. மேலும் மாவட்டங்கள் தோறும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை பொறுப்பாளர்களாக நியமித்திருக்கிறது அதிமுக.

உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்த நிலையில்.,, அந்தக் காலக்கெடுவில் இருந்து சில நாட்கள் கூடுதல் அவகாசம் கேட்டுள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இன்று தேர்தல் அட்டவணையை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

-வேந்தன்.

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

திங்கள் 13 செப் 2021