மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 செப் 2021

கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தால் கைது!

கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தால் கைது!

கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பவர்களை கைது செய்வதற்கான சட்ட திருத்த மசோதாவை இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது முதல் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை கிட்டதட்ட 600 கோடி சொத்து மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில் நிலங்களை அபகரித்தவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆரம்பத்திலேயே அமைச்சர் சேகர் பாபு கூறியிருந்தார். அதன்படி, கோயில் நிலங்கள் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திமுக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று(செப்டம்பர் 13) நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு எதிரான சட்டதிருத்த மசோதாவை அறிமுகம் செய்தார்.

அந்த மசோதாவில் கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், ஆக்கிரமிப்பாளர்களை கைது செய்து ஜாமீனில் விட முடியாத அளவிற்கு சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள சட்டத்தில் கைது செய்வதற்கான வழிவகை இல்லை என்பதால், இந்த திருத்தம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

சமய நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பது தொடர்பாக 1959 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மீது சிவில் வழக்குகள் மட்டுமே போட முடியும். கைது நடவடிக்கைகள் எடுக்க முடியாது. இதனால் பல இடங்களில் கோயில் நிலங்களின் ஆக்கிரமிப்பு அதிகமாக நடைபெற்று வருகிறது. இதை தடுக்கும் வகையில் புதிய சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

-வினிதா

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

திங்கள் 13 செப் 2021