மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 12 செப் 2021

‘நீட்’க்கு எதிரான சட்டப்போராட்டம் தொடரும்: உதயநிதி

‘நீட்’க்கு எதிரான சட்டப்போராட்டம் தொடரும்: உதயநிதி

நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவர் தனுஷின் உடலுக்கு, அமைச்சர்கள், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ ஆகியோர் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் பகுதியைச் சேர்ந்த சிவகுமார், சிவஜோதி தம்பதியினரின் இரண்டாவது மகன் தனுஷ். கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதித் தோல்வியுற்ற நிலையில் மூன்றாவது முறையாக இன்று நடைபெற்ற தேர்வுக்குத் தயாராகி வந்தார்.

ஒருவேளை இந்த தேர்விலும் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் மாணவர் தனுஷ் இன்று அதிகாலை வீட்டின் உள்ளே தனியறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாடு முழுவதும் மாணவர்கள் இன்று தேர்வு எழுதிய நிலையில் தனுஷ் தற்கொலை செய்து கொண்டது தமிழக மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தனுஷின் உடல் மேட்டூர் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர் குடும்பத்தினர் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் நேரில் சென்று மாணவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அனைவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “தமிழகத்தில் எது நடக்கக்கூடாது என்று அனைவரும் எண்ணிக் கொண்டிருந்தமோ அந்த துயரம் இன்று நடந்துவிட்டது. நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெறச் சட்ட போராட்டம் தொடங்கும். நீட் தேர்வால் ஒட்டுமொத்த மாணவர்கள் சமுதாயமும் பாதிக்கப்படுவதால் ஒரு கூட்டு முயற்சியாக நீட் தேர்விலிருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும். இதில் அரசியல் பேச விரும்பவில்லை.

அதிமுக, திமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு விலக்கு குறித்த அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆட்சியில் நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டம் இயற்றப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.

திமுக ஆட்சியமைத்துக் குறுகிய காலமே ஆனதால், இந்த காலகட்டத்திற்குள் சட்டப் போராட்டத்தை நம்மால் மேற்கொள்ள முடியவில்லை. கண்டிப்பாக முதல்வர் தலைமையில் நல்ல முடிவு எட்டப்படும்.

நீட் தேர்வுக்கு எதிராக ஒன்றிய அரசிடம் வலியுறுத்துவோம். இல்லை என்றால் அனைத்து மாநில முதல்வர்களின் ஆதரவைத் திரட்டி நடவடிக்கை எடுக்கப்படும்.

நீட் தேர்வினால் திமுகவைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமல்ல அதிமுக, பாமக, பாஜகவைச் சேர்ந்த அனைத்து மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இது மாணவர்களின் பிரச்சனை என்பதால் அரசியல் பேச விரும்பவில்லை. மாணவர்கள் மனச் சோர்வு ஏற்படாமல் இருக்க வேண்டும். நீட் தேர்வை எதிர்த்து அனைத்து தரப்பினரும் மாணவர்களுக்குத் துணை நிற்க வேண்டும்” என்று கூறினார்.

-பிரியா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

ஞாயிறு 12 செப் 2021