மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 11 செப் 2021

வள்ளுவர் கோட்டத்தில் இனி போராட முடியுமா?

வள்ளுவர் கோட்டத்தில் இனி போராட முடியுமா?

சென்னையில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள இடங்களுக்கான பட்டியலில் இருந்து வள்ளுவர் கோட்டத்தை அகற்றுவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 11) அறிவுறுத்தியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் வள்ளுவர் கோட்டம் பகுதி எப்போதுமே பரபரப்பாக இருக்கும். போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள கொரோனா காலத்தில் கூட வள்ளுவர் கோட்ட பகுதியில் பல்வேறு திடீர் போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் நடந்திருக்கின்றன.

சென்னையில் போராட்டம் நடத்துவதற்கான இடங்களில் வள்ளுவர் கோட்ட பகுதியையும் முக்கியமானதாக வைத்திருக்கிறது சென்னை மாநகர போலீஸ். அந்த வகையில்தான் வள்ளுவர் கோட்ட பகுதியை போராட்ட ஸ்பாட் ஆக பலரும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் என்று பல தரப்பினரும் அடிக்கடி வள்ளுவர் கோட்டத்தை போராட்ட ஸ்பாட் ஆக்கிக் கொண்டிருகிறார்கள்.

இந்த நிலையில்தான் சென்னை நுங்கம்பாக்கம் ஏரிக்கரை குடியிருப்போர் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அதில், போராட்டம் நடத்தும் இடத்தில் இருந்து வள்ளுவர் கோட்டத்தை நீக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.

அந்த மனுவில், “சென்னை வள்ளுவர் கோட்டம் பொதுக் கூட்டம், ஆர்பாட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அடிக்கடி போராட்டங்கள் நடக்கின்றன. அதனால் உள்ளூர்வாசிகளுக்கு மிகவும் வேதனையாக உள்ளது. சொந்த வீட்டில் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை, எங்கள் பகுதியில் நடக்க முடியவில்லை . நாங்கள் இதை ஒலி மாசுபாடு, சுகாதார வசதிக் குறைவு, காற்று மாசுபாடு என்று கூட பார்க்கவில்லை. எங்கள் வீட்டில் இருந்து கூட பல சமயங்களில் வெளியே வரமுடியவில்லை. நாங்கள் இதுகுறித்து பல அதிகாரிகளுக்கு மனு அளித்தும் யாரும் இதுகுறித்து பரிசீலிக்கவில்லை. மேலும், சில அதிகாரிகளுக்குப் புகார் அளித்தும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை”என்று குறிப்பிட்டிருந்தனர்.

மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, “சென்னை போலீஸ் கமிஷனரிடம் இந்த மனுவை பரிசீலிக்குமாறு கோருகிறோம். இந்த விவகாரத்தில் பொது மக்கள் நலனையும், வள்ளுவர் கோட்டம் பகுதி வாழ் மக்களின் நலனையும் கருதி ஒரு முடிவெடுங்கள்” என்று குறிப்பிட்டு...குடியிருப்போர் சங்கம் நான்கு வாரங்களுக்குள் சென்னை மாநகர போலீஸ் ஆணையாளரிடம் புதிய புகாரை வழங்க வேண்டும். சென்னை மாநகர போலீஸ் ஆணையர் இதுகுறித்து ஒரு முடிவெடுப்பார்” என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

சனி 11 செப் 2021