மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 11 செப் 2021

பனாரஸ் பல்கலையில் பாரதியார் பெயரில் இருக்கை!

பனாரஸ் பல்கலையில் பாரதியார் பெயரில் இருக்கை!

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் படிப்புகளுக்காக மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பெயரில் இருக்கை உருவாக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

சுப்பிரமணிய பாரதியாரின் 100வது நினைவுநாள் இன்று(செப்டம்பர் 11) அனுசரிக்கப்பட்டது. இந்நாளையொட்டி அவரது உருவப்படம் மற்றும் சிலைக்கு தமிழ்நாடு முதல்வர் மற்றும் அமைச்சர்கள், பிற கட்சி தலைவர்கள் என அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதுமட்டுமில்லாமல், ஆண்டுதோறும் செப்டம்பர் 11ஆம் தேதி ’மகாகவி நாளாக’ கடைபிடிக்கப்படும் என்பன உள்ளிட்ட 14 அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் இருக்கை அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டரில்,“உலகின் மிகப் பழமையான மொழியான தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இன்று, சுப்பிரமணிய பாரதியின் 100 வது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக காசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் படிப்புக்காக சுப்பிரமணிய பாரதி அமர்வை நிறுவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பை வரவேற்ற தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை,” மகாகவி பாரதியார் மீது பிரதமர் அளவில்லாத மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளார். அவரின் அறிவிப்பால் அனைத்து தமிழ் மக்களின் உள்ளம் பூரிப்பு அடைந்துள்ளது. புதிய ஆளுநர் நியமனத்தில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. இதற்கு முன்னதாக பல்வேறு காலகட்டங்களில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆளுநராக பணிபுரிந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் ட்விட்டரில்,” சுப்பிரமணிய பாரதியின் 100வது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக வாரணாசி பனாரஸ் இந்து பல்கலையில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை நிறுவுவதாக அறிவித்த பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றிகள்” என்று பதிவிட்டுள்ளார்.

-வினிதா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

சனி 11 செப் 2021