மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 11 செப் 2021

ஸ்டாலினுக்கு மீண்டும் நன்றி சொன்ன ஓபிஎஸ்

ஸ்டாலினுக்கு மீண்டும் நன்றி சொன்ன ஓபிஎஸ்

இன்று(செப்டம்பர் 11) மகாகவி பாரதியாரின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, மகாகவி பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் தேதி இனி ஆண்டுதோறும் ‘மகாகவி நாளாக’ கடைபிடிக்கப்படும். கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப்போட்டி நடத்தி பாரதி இளம் கவிஞர் விருது வழங்கப்படும், பாரதியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் மற்றும் கட்டுரைகளை தொகுத்து மனதில் உறுதி வேண்டும் என்ற புத்தகத்தை மாணவ மாணவியருக்கு வழங்குதல் , பாரதியின் உருவச்சிலைகள் உருவம் பொறித்த கலைப்பொருட்களை பூம்புகார் நிறுவனத்தின் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்தல், பாரதி குறித்த நிகழ்வுகளை பாரெங்கும் பாரதி என்ற தலைப்பில் நடத்துதல், திரையில் பாரதி என்ற நிகழ்வினை நடத்துதல், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியின் பெயரில் இருக்கை அமைத்தல், உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை பராமரிக்க அரசு சார்பில் நிதி உதவி வழங்குதல் உள்ளிட்ட 14 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று(செப்டம்பர் 10) வெளியிட்டார்.

இந்த நிலையில் இன்று(செப்டம்பர் 11)பாரதியாரின் 100-வது நினைவுநாளை ஒட்டி, சென்னை, மெரினாவில் உள்ள பாரதியாரின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதல்வருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தங்கம் தென்னரசு, ஏ.வ.வேலு மற்றும் நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவர் கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில் பாரதியார் நினைவுநாளை மகாகவி நாளாக அறிவித்ததற்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.

இன்று ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினத்தை ஒட்டி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11 ஆம் நாள் மகாகவி நாளாக அரசு சார்பில் கொண்டாடப்படும் என்று முதல்வர் அறிவித்திருப்பது அனைவரும் வரவேற்கக் கூடிய ஒன்று. தமிழ் மொழியின் சிறப்பினை உலகுக்கு உணர்த்திய கவிஞர் மகாகவி பாரதியார் மொழிப்பற்று உடனே நாட்டுப்பற்று உடையவனாய் வாழ இயலும் என்பதை மெய்ப்பித்து காட்டியவர் மகாகவி பாரதியார். பாரதி ஒரு பன்மொழிப் புலவர் .ஆங்கிலம், பிரெஞ்சு ,தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

”ஏழை மற்றும் அடிமை என்றும் எவனும் இல்லை சாதியில்” என்று பாடிய புரட்சிக் குயில் பாரதி நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் நாள் மகாகவி நாளாக அரசு சார்பில் கொண்டாடப்படும் என்பது உள்ளிட்ட முதல்வரின் 14அறிவிப்புகளை அதிமுக சார்பில் வரவேற்பதோடு இந்த அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

சனி 11 செப் 2021