மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 10 செப் 2021

கிராண்ட் சேல் போல் பொதுத்துறை சொத்துகளை விற்கின்றனர்: ப.சி

கிராண்ட் சேல் போல் பொதுத்துறை சொத்துகளை விற்கின்றனர்: ப.சி

கிராண்ட் சேல் என்பது போல் பொதுத் துறை நிறுவனங்களை விற்று மோடி அரசு மூடுவிழா நடத்துகிறது என ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், "பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை குறைய வாய்ப்பில்லை. ஆட்சி மாறினால் வேண்டுமானால் குறைய வாய்ப்பு இருக்கிறது.

இந்திய பாதுகாப்புக்கு இலங்கை அச்சுறுத்தலாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. இந்தியாவின் செல்வாக்கு பகுதியான இந்து மகா சமுத்திர பகுதி கொஞ்சம் கொஞ்சமாகக் கடந்த 7 ஆண்டுகளாகச் சிதைந்து வருகிறது. இதற்கு ஒன்றிய அரசு தான் காரணம். பழைய வரலாற்றைப் படிக்காமல், வெளிநாட்டுக் கொள்கையை வகுத்துக்கொண்டு செயல்படுவதால் தான் நம்முடைய செல்வாக்கு குறைந்து வருகிறது.

நேபால், வங்க தேசம், இலங்கை, மாலத் தீவு ஆகிய பகுதிகளில் நமது செல்வாக்கு குறைந்து வருவதற்குச் சரியான வெளிநாட்டுக் கொள்கை இல்லை என்பதுதான் காரணம்.

பொதுத் துறை நிறுவனங்களை, மொத்த வியாபாரமாக விற்பனை செய்கிறது ஒன்றிய அரசு. 70 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது என்று மோடி கேட்கிறார். 70 ஆண்டுகளாகக் காங்கிரஸ் ஒன்றுமே செய்யாதது போலவும், 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி நரேந்திர மோடி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றியதால் தான் இந்தியாவுக்கே சுதந்திரம் கிடைத்தது போன்ற கற்பனையிலும் உள்ளனர்.

காங்கிரஸ் 70 ஆண்டுகளாக என்ன செய்தது என ஊடகங்கள் சரியாக விளம்பரப்படுத்துவது கிடையாது. ஆகையால் பிரதமர் மோடியே 70 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது எனப் பட்டியலே போட்டிருக்கிறார்.

எத்தனை ஆயிரம் கிலோமீட்டர் ரயில்வே பாதை, துறைமுகங்கள், விமான தளங்கள் என அனைத்தையும் அவரே பட்டியல் போட்டு வெளியிட்டிருக்கிறார். இதற்காக அவருக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். இனிமேல் காங்கிரஸ் என்ன செய்தது எனக் கேட்டால், அவர் கையெழுத்திட்டுள்ள இந்த பட்டியலையே படித்துக் காண்பிக்கலாம். காங்கிரஸ் மற்றுமில்லை மற்ற பிரதமர்களும் திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறார்கள்.

ஆகவே 70 ஆண்டு பொதுத் துறை சொத்துகளை, நிறுவனங்களைத் தீபாவளி காலங்களில் நடைபெறும் கிராண்ட் சேல் என்பது போல், இவர்கள் ’கிராண்ட் க்ளோசிங் சேல்’ ஆக மூடு விழா நடத்த முயல்கிறார்கள். தவறான செயலை மோடி எந்த துணிச்சலில் செய்கிறார்? என்று தெரியவில்லை.

தமிழகத்தைப் பொறுத்தவரை எல்லா வகையிலும் மக்களுக்கு மகிழ்ச்சித் தரக்கூடிய ஆட்சியைத் தந்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது, உள்ளாட்சித் தேர்தலில் இது எதிரொலிக்கும். உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு அரசுக்குப் பாராட்டுகள் என்று தெரிவித்தார்.

-பிரியா

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

வெள்ளி 10 செப் 2021