மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 10 செப் 2021

மம்தாவை எதிர்த்து நிற்கும் பாஜக பெண் வேட்பாளர் இவர்தான்!

மம்தாவை எதிர்த்து நிற்கும் பாஜக பெண் வேட்பாளர் இவர்தான்!

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி அம்மாநிலத்தில் பவானிபூர் மாநிலத்தில் நடக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். அதற்காக இன்று (செப்டம்பர் 10) அவர் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தாவின் திருணமூல் காங்கிரஸ் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும், முதல்வரான மம்தா நந்திகிராம் தொகுதியில் தன் கட்சியில் இருந்து பாஜகவுக்கு சென்ற சுனந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார். இந்நிலையில் முதல்வராக இருக்கும் மம்தா ஆறு மாதங்களுக்குள் சட்டமன்ற உறுப்பினர் ஆககேண்டும் என்பதால் அம்மாநில தலைமைச் செயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்க பவானிபூரில் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.

நாடு தழுவிய அளவில் பாஜக எதிர்ப்புக் கூட்டணியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உருவாக்கி வரும் நிலையில், அதில் மம்தா பானர்ஜியும் கலந்துகொண்டார். இந்த நிலையில் மம்தாவை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தவில்லை. ஆனால் மம்தாவுக்கு எதிராக தனது வேட்பாளரை பாஜக இன்று அறிவித்தது.

இந்த தேர்தலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக பிரியங்கா திப்ரேவால் என்ற இளம் வழக்கறிஞரை நிறுத்துகிறது பாஜக.

பிரியங்கா திப்ரேவால் 41 வயதான கல்கத்தா உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர். மேற்கு வங்காள சட்டமன்றத்தேர்தலுக்கு பிந்தைய பெரும் வன்முறை தொடர்பான வழக்கில் அவர் நீதிமன்றத்தில் திருணமூல் காங்கிரஸுக்கு எதிராக வாதாடி வருகிறார்.

2014 இல் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த பிரியங்கா திப்ரேவால் தற்போது பாஜகவின் இளைஞர் பிரிவான யுவ மோர்ச்சாவில் துணைத் தலைவர் பதவியை வகித்து வருகிறார்.

-வேந்தன்

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

வெள்ளி 10 செப் 2021