மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 10 செப் 2021

வாகனங்களில் தலைவர்கள் படம்: நீக்க உத்தரவு!

வாகனங்களில் தலைவர்கள் படம்: நீக்க உத்தரவு!

வாகனங்களில் வெளிப்புறம் தெரியும்படி ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யப்படுகிறது. அனைவரும் எளிதாகக் காணும் வகையில் நம்பர் பிளேட்டுகள் அமைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. ஆனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் இதைக் கண்டுகொள்வதில்லை. எனவே இதற்குத் தகுந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை, விசாரித்த நீதிமன்றம் வாகனங்களில் வெளிப்புறம் தெரியுமாறு ஒட்டப்படும் தலைவர்களின் புகைப்படங்களை 60 நாட்களுக்குள் நீக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

அரசியல் கட்சிக்கொடி கட்சித் தலைவர்களின் படம் ஆகியவை தேர்தல் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் பயன்படுத்துவது ஏற்கத்தக்கது அல்ல. அரசியல் தலைவர்களின் படங்கள் மற்றும் கட்சிக் கொடிகளைத் தேர்தல் நேரத்தில் மட்டும் பயன்படுத்தலாம். அதுபோன்று வாகனங்களில் தடைசெய்யப்பட்ட ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் விதிமுறை மீறிய நம்பர் பிளேட்டுகளை நீக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

-பிரியா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

வெள்ளி 10 செப் 2021