மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 10 செப் 2021

பண்டிகைகள்: தொடர்ந்து எச்சரிக்கும் ஒன்றிய அரசு!

பண்டிகைகள்: தொடர்ந்து எச்சரிக்கும் ஒன்றிய அரசு!

கொரோனா பரவலைத் தடுக்க மக்கள் வீட்டிலேயே பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை குறைந்து வரும் நிலையில், கேரளா மாநிலத்தில் மட்டும் இன்னும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலுக்கு ஏற்ப அந்தந்த மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்த நிலையில், இன்று (செப்டம்பர் 10) நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து சரஸ்வதி, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகள் வரவுள்ளதால், பண்டிகைகளை கவனமுடன் கட்டுப்பாடுகளை பின்பற்றி கொண்டாட வேண்டும் என்று ஒன்றிய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், நாட்டில் தற்போதைய கொரோனா நிலவரம் குறித்து விளக்கம் அளிப்பதற்காக ஒன்றிய சுகாதாரத் துறை அதிகாரிகள் நேற்று(செப்டம்பர் 9) செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

ஒன்றிய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் பேசுகையில், “இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை. தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகிறது. மொத்த பாதிப்பில் கேரளாவில் மட்டும் 68 சதவிகிதம் பாதிப்பு பதிவாகிறது. பண்டிகை காலங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். தடுப்பூசி செலுத்தும் பணி முன்னேற்றம் அடைந்துள்ளது. கடந்த மே மாதத்தில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த எண்ணிக்கை செப்டம்பரில் 78 லட்சமாக உயர்ந்துள்ளது. இது இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறினார்.

இதையடுத்து பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே பால், “இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த கொரோனா சூழலில் பண்டிகைகளை வீட்டில் இருந்தப்படியே கொண்டாட வேண்டும். இதை அறிவுரையாக அல்லது எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளலாம். கொரோனா தொற்றுக்கு கொண்டாட்டங்கள் மற்றும் கூட்டங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால், தீபாவளி வரை பண்டிகைகளை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் கொண்டாட வேண்டும். இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது நாட்டில் 35 மாவட்டங்களில் கொரோனா பரவல் விகிதம் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ளது. நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட 58 சதவிகிதத்தினர் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து ஐசிஎம்ஆர் தலைவர் பல்ராம் பார்கவா பேசுகையில், “கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ், இறப்பை தடுப்பதில் 96.6 சதவிகிதம் பயனுள்ளதாகவும்,இரண்டாவது டோஸ் தடுப்பூசி, 97.5 சதவிகிதம் பயனுள்ளதாகவும் இருக்கும்.

கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வரையிலான தரவுகளை பார்க்கிறபோது, தடுப்பூசிகள் உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுக்கிறது. கொரோனா இரண்டாவது அலையில் ஏப்ரல், மே மாதங்களில் இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள்” என்று கூறினார்.

-வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வெள்ளி 10 செப் 2021