மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 9 செப் 2021

சிறுபான்மையினருக்கான 17 புதிய அறிவிப்புகள்!

சிறுபான்மையினருக்கான 17 புதிய அறிவிப்புகள்!

சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில் 14 லட்சம் ரூபாய் செலவில் நூலகம் உருவாக்கப்படும் என்று சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

நேற்று (செப்டம்பர் 8) நடைபெற்ற சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் நலத் துறை சார்பாக பல்வேறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வெளியிட்டார்.

அதில், 14 சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில் ரூ.14 லட்சம் செலவில் நூலகம் அமைக்கப்படும். இந்த விடுதிகளுக்கு 5 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் உடற்பயிற்சி கருவிகள் மற்றும் விளையாட்டு கருவிகள் வழங்கப்படும்.

14 சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதி மாணவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் தனித்திறன் மற்றும் ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்படும்.

சிறுபான்மையினர் நல விடுதிகளில் மாணவ மாணவியரின் சேர்க்கைக்கு வருமான வரம்பு 1 லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர் அல்லது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை ஆண்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாகவும் பெண்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும்.

சிறுபான்மையினருக்கு 1,000 இலவச மின்மோட்டார் உடன் கூடிய தையல் இயந்திரங்கள் ரூ.45 லட்சம் செலவில் வழங்கப்படும்.

தேனி மாவட்டத்திலுள்ள சிறுபான்மையினர் விடுதிக்கு 3 கோடியே 47 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் செலவில் சொந்தக் கட்டடம் கட்டப்படும்.

ஜெருசலேம் புனித பயணத்துக்கு அருட்சகோதரிகள் கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் 37 ஆயிரம் ரூபாயிலிருந்து 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.

உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு 10 ஆயிரத்து 553 மிதிவண்டிகள் 4 கோடியே 76 லட்சத்து 23 ஆயிரம் செலவில் வழங்கப்படும்.

அனைத்து மாவட்டங்களில் கூடுதலாக முஸ்லிம் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கங்கள் தொடங்கப்படும்.

தமிழ்நாடு வக்பு வாரியம் தனது பணிகளை திறம்பட மேற்கொள்ளும் வகையில் சென்னையில் உள்ள தமிழ்நாடு வக்பு வாரிய தலைமை அலுவலகத்துக்கு வக்பு வாரிய நிலத்தில் புதிதாக கட்டடம் கட்டப்படும்.

சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் 5 மாவட்டங்களில், புதிய பணியிடங்களுடன் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் 1 கோடியே 75 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் உள்ளிட்ட 17 அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.

-வினிதா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

வியாழன் 9 செப் 2021