மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 9 செப் 2021

ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை நேரலை: முதல்வர்!

ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை நேரலை: முதல்வர்!

செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை நடைபெறும் போது பேரவை நிகழ்வுகளை ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. தற்போது திமுக ஆட்சிக்கு வந்து சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அதனை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் வலியுறுத்தி வந்தனர்.

இதுதொடர்பாக இன்று (செப்டம்பர் 9) சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

சட்டப்பேரவை நேரலை செய்யப்படும் என்று திமுக கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது என அவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “கலைவாணர் அரங்கில் சில காரணங்களால் பேரவை கூட்டத்தை நேரலை செய்ய முடியவில்லை. புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும்போது சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து காவல் துறையினருக்காக ‘உங்கள் இல்லம்’ திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார். இதற்குப் பதிலளித்த முதல்வர், “கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‘உங்கள் இல்லம்’ திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள் தரமாக இல்லை எனவும் தாங்கள் கொண்டு வந்த திட்டம் என்பதற்காக, அதனைக் கைவிட மாட்டோம்” என்றும் குறிப்பிட்டார்.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வியாழன் 9 செப் 2021