மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 9 செப் 2021

கடைகளை மூடியபிறகு மதுவிற்பனை: அமைச்சர் எச்சரிக்கை!

கடைகளை மூடியபிறகு மதுவிற்பனை: அமைச்சர் எச்சரிக்கை!

கடைகளை அடைத்தபிறகு மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சாரத் துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

இன்றைய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரான ஈஸ்வரன், மதுக்கடைகளில் விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி,” கடந்த காலங்களைப் போல் இல்லாமல் கழக ஆட்சியில் பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் மூலம் மதுபான கடைகள் அனுமதிக்கப்பட்ட நேரங்களை விட ஒரு நிமிடம் கூட கூடுதலாக மது விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் எந்த இடத்திலும் சந்துக்கடைகள், பூட்டிய மதுபார்கள் மூலம் மதுபாட்டில் விற்பனை செய்யக் கூடாது என்று விற்பனையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தை மீறி மது விற்பனை செய்யப்பட்டால், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

முன்னதாக, உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் உளுந்தூர்பேட்டை தொகுதியில் உள்ள விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு முழுவதும் 4,52,277 விவசாயிகள் இலவச மின் இணைப்புக்காக காத்திருந்து வருகின்றனர். இந்தாண்டு தமிழ்நாடு முதல்வர் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகளை வழங்கவுள்ளார்.

அதன்மூலம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 4554 விவசாயிகளுக்கும் மிக விரைவில் மின் இணைப்புகள் வழங்கப்படும்” என்று கூறினார்.

-வினிதா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

வியாழன் 9 செப் 2021