மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 9 செப் 2021

நயினார் நாகேந்திரனை கிண்டல் செய்த அப்பாவு

நயினார் நாகேந்திரனை கிண்டல் செய்த அப்பாவு

சட்டப்பேரவையில் நேற்று பாஜக எம்.எல்.ஏ.நயினார் நாகேந்திரன் பேசும்போது, சபாநாயகர் இடைமறித்து பேசி கிண்டல் செய்ததால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி தொடங்கி சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பல்வேறு முக்கிய அறிவிப்புகள், வெளிநடப்பு, சட்ட திருத்த முன்வடிவு என பரபரப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 8) நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்கள் வெளிநடப்பு செய்வதற்கு முன்பாக பாஜக சட்டமன்ற தலைவர், நயினார் நாகேந்திரனை பேச சபாநாயகர் அப்பாவு அனுமதித்தார்.

அப்போது பேசிய நயினார் நாகேந்திரன், இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம் இல்லை என்றார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய சபாநாயகர் அப்பாவு, ‘இந்த சட்டம் என்றால் முதல்வர் கொண்டு வந்த சட்டமா?’ என கேள்வி எழுப்பினார்.

இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

உடனே ஒன்றிய அரசு கொண்டுவந்த சட்டம் என்று தெரிவித்த நயினார் நாகேந்திரன் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்துப் பேசினார்.

அப்போது தவறுதலாக ‘ஒன்றிய அரசு கொண்டு வந்த இந்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை’ என்று குறிப்பிட்டுவிட்டார்.

உடனடியாக சபாநாயகர், ‘அதைத்தான் நாங்களும் சொல்கிறோம், நன்றி’ என குறிப்பிட்டதும் மீண்டும் அவையில் சிரிப்பொலி எழுந்தது.

இதன்பின் தவறுதலாகக் குறிப்பிட்டு விட்டேன் ‘இந்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை’ என்று கூறி பாஜக வெளிநடப்பு செய்கிறது என்று தெரிவித்தார்.

மீண்டும் குறுக்கிட்டுப் பேசிய சபாநாயகர் அப்பாவு, உங்களைத் தனியாக விட்டு விட்டு உங்கள் கட்சியினர் வெளிநடப்பு செய்து விட்டார்களே. பார்த்தீர்களா என கிண்டல் செய்ததும் சட்டப்பேரவையைக் கலகலப்பானது.

-பிரியா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

வியாழன் 9 செப் 2021