மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 8 செப் 2021

பையனூர் பங்களா முடக்கம்: சசிகலாவுக்கு அடுத்த செக்!

பையனூர் பங்களா முடக்கம்: சசிகலாவுக்கு அடுத்த செக்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு பண மதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு, சென்னை, புதுச்சேரி, கோவை உள்ளிட்ட 9 இடங்களில் கார் டிரைவர், உதவியாளர் என பினாமி பெயர்களில் பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வாங்கப்பட்டதாக வருமான வரித்துறை கண்டறிந்ததாக தகவல் வெளியானது. அப்போதே பினாமி பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் வருமான வரித் துறை அதிகாரிகள் சசிகலாவின் சொத்துகளை முடக்கும் பணியைத் தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில் சசிகலா குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட 187இடங்களில் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர். 4 நாட்கள் வரை நடந்த இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக சசிகலா குடும்பத்தினரிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணையும் மேற்கொண்டனர். அதில் பினாமி பெயரில் முறைகேடாக 1600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் வாங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது

.

மெகா ரெய்டைத் தொடர்ந்து சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் பினாமிகள் கண்டறியப்பட்டு, அவர்களின் சொத்துக்களை வருமானவரித்துறை அவ்வப்போது தொடர்ந்து முடக்கி வருகிறது. இந்த வரிசையில் இப்போது சென்னையை அடுத்த பையனூரில் ஓ.எம்.ஆர். சாலையில் இருக்கும் சசிகலாவுக்கு சொந்தமான 49 ஏக்கர் நிலத்தையும், அங்குள்ள பங்களாவையும் வருமானவரித் துறை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கியுள்ளனர். இது தொடர்பான உத்தரவை துறை ரீதியான சார் பதிவாளர்களுக்கு வருமான வரித்துறை அனுப்பியுள்ளது.

சசிகலாவின் சொத்துகள் மொத்தம் எவ்வளவு என்பதை மதிப்பிட்டு அதை முடக்கும் பணி தொடரும் என்கிறார்கள் வருமான வரி வட்டாரத்தில்.

-வேந்தன்

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...

12 நிமிட வாசிப்பு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

7 நிமிட வாசிப்பு

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

புதன் 8 செப் 2021