மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 8 செப் 2021

வெங்கையா நாயுடுவால் மூடப்பட்ட சாலை: மக்கள் அதிருப்தி!

வெங்கையா நாயுடுவால் மூடப்பட்ட சாலை: மக்கள் அதிருப்தி!

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெலங்கானாவிலிருந்து இந்திய விமானப்படையின் தனி விமானத்தில் நேற்று மாலை சென்னை விமான நிலையம் வந்தார்.

விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு, ஆளுநர் மாளிகை செயலாளர் ஆனந்த் ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

நேற்று மாலை 6.30 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு வந்த வெங்கையா நாயுடு, மறுநாள் ஷெடியூல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரியப்படுத்தினார் . வழக்கமாக ஆளுநர் மாளிகையில் நடைப்பயிற்சி மற்றும் ஷட்டில் காக் விளையாடும் வெங்கையா நாயுடு, இம்முறை சென்னை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வளாகத்திற்கு பேட்மிண்டன் விளையாடப்போவதாக தெரியப்படுத்தினார்.

அதன்படி, காலை 6.20 மணிக்குத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வளாகத்திற்கு வந்தவர், உள்ளூர் வீரர்களுடன் பேட்மிண்டன் விளையாடினார். அப்போது எடுத்த புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

முன்னதாக, வெங்கையா நாயுடு இங்கு வருவது குறித்துப் பாதுகாப்பு அதிகாரிகள் சென்னை மாநகராட்சி காவல்துறை ஆணையருக்குத் தெரியப்படுத்தினர். உடனே அடையாறு துணை ஆணையருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

எனவே, இன்று காலை 5.00 மணி முதல் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அந்த சாலையும் மூடப்பட்டது. இதனால் உள்ளூர் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளத் தடை விதித்ததால் பொது மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

பாதுகாப்பு காரணங்களுக்காகப் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் இன்று காலையிலேயே அதிருப்தி அடைந்த மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். “ஏன் நடைப்பயிற்சியை மேற்கொள்வதைத் தடுக்கிறீர்கள். மக்களுக்காக உள்ளவர்களே இதுபோன்று நடந்துகொள்ளலாமா” என போலீசாரிடம் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

முன்னறிவிப்பு எதுவுமில்லாமல் போடப்பட்ட இந்த பாதுகாப்பு நடவடிக்கையால் பொதுமக்கள் சிரமத்தைச் சந்தித்தது மட்டுமின்றி, காலையிலேயே நடந்த வாக்குவாதத்தின் காரணமாக போலீசாரும் வருத்தமடைந்தனர்.

-வணங்காமுடி

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

புதன் 8 செப் 2021