மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 8 செப் 2021

அமெரிக்கா தேடும் பயங்கரவாதிகளால் ஆன தலிபான் அரசு!

அமெரிக்கா தேடும் பயங்கரவாதிகளால் ஆன தலிபான் அரசு!

ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய தலிபான்கள் நேற்று (செப்டம்பர் 7) இரவு தங்களது இடைக்கால அரசாங்கம் பற்றிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் உலக அளவில் பயங்கரவாத பட்டியலில் ஐ.நா. மற்றும் அமெரிக்கா ஆகியோரால் வைக்கப்பட்டுள்ளவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இடைக்கால அரசின் பிரதமரான முல்லா முகமது ஹசன் அகுந்த் ஐ.நா.வின் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள நபராவார். இவர் கடைசியாக தலிபான்கள் ஆட்சி செய்த 1996-2001 காலகட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர். அவர் தலிபானின் இராணுவ பிரிவை விட மதப் பிரிவில் தீவிரமாக இருந்தவர்.

ஆப்கனின் தற்போதைய உள்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள சிராஜுதீன் ஹக்கானியும் அமெரிக்காவின் ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வஸ்டிகேஷன் எனப்படும் எஃப்.பி.ஐயால் தேடப்படுபவர். இவர் ஹக்கானி நெட்வொர்க் எனப்படும் தீவிரவாதக் குழுவின் தலைவராக இருக்கிறார். ஹக்கானி நெட்வொர்க் அமெரிக்காவால் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அல்-கொய்தாவுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணுகிறது என்றும் அமெரிக்கா தொடர்ந்து தெரிவித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் மீதான தாக்குதல்களுக்குப் பின்னணியில் இருந்ததாக சிராஜுதீன் ஹக்கானியை அமெரிக்கா தேடிவருவது குறிப்பிடத் தக்கது.

முல்லா யாகூப் பாதுகாப்பு அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.. அவர் தலிபான் நிறுவனர் மற்றும் மறைந்த உச்ச தலைவர் முல்லா உமரின் மகன். தலிபானின் இணை நிறுவனர் முல்லா அப்துல் கனி பரதர் பிரதமரின் பிரதிநிதிகளில் ஒருவராக இருப்பார். இவர்தான் கடந்த ஆண்டு படைகளை திரும்பப் பெற்றுக் கொள்ளும் ஒப்பந்தத்தில் அமெரிக்காவுடன் கையெழுத்திட்டவர்.

இவ்வாறு ஆப்கன் அரசின் பிரதமர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் அமெரிக்காவால் தேடப்படுபவர்கள் என்பதைக் குறிப்பிட்டு அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. எனவே ஆப்கனுடனான அமெரிக்காவின் மோதல் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தலிபானின் அரசில் ஒரு பெண் கூட இல்லை. அனைவருமே ஆண்கள்தான்.

-வேந்தன்

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

8 நிமிட வாசிப்பு

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக ...

12 நிமிட வாசிப்பு

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

5 நிமிட வாசிப்பு

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

புதன் 8 செப் 2021